Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
Muttai Sambal Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, தோசை செய்வீர்களா? அதற்கு வழக்கமான சட்னி அல்லது குருமா இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான முட்டை சம்பல் கிரேவியை செய்து கொடுங்கள். இந்த முட்டை சம்பல் மலேசியாவில் மிகவும் பிரபலமானதாகும்.

முட்டையை குழம்பு, பொரியல் அல்லது ஆம்லெட் செய்துதான் சாப்பிடுவோம். அதற்குப் பதிலாக இந்த முட்டை சம்பலை முயற்சி செய்து பாருங்கள். இந்த முட்டை சம்பல் சுவையானது மற்றும் மிகவும் வித்தியாசமானது. இது சப்பாத்தி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பலை சாப்பிட நீங்கள் ஹோட்டலுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை, வீட்டிலேயே ஈசியாக செய்து விடலாம்.
உங்களுக்கு மலேசிய ஸ்பெஷல்முட்டை சம்பலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சம்பல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சம்பல் மசாலா அரைக்க:
- 1 பெரிய வெங்காயம்
- 5 சின்ன வெங்காயம், தோல் நீக்கி, முழுதாக வைக்கவும்
- 15 காஷ்மீரி மிளகாய்
- 10 பூண்டு பல்
- 1 இன்ச் இஞ்சி
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 4 ஸ்பூன் தண்ணீர்
முட்டையை வறுக்க:
- 4 வேக வைத்த பெரிய முட்டை
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மிளகுத் தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் உப்பு
பிற பொருட்கள்:
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் புளிக்கரைசல்
- 1 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
- 1 கப் தண்ணீர்
- 1 பெரிய வெங்காயம்
- 2 கீறிய பச்சை மிளகாய்
செய்முறை:
- காஷ்மீரி மிளகாயை 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
- சம்பல் செய்வதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வதக்கிய முட்டைகளை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தனியே எடுத்து வைக்கவும்.
- இப்போது அதே வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சம்பல் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் உப்பு, வெல்லம் மற்றும் புளிக் கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் சற்று வதங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் வறுத்த முட்டைகளைச் சேர்த்து, அவை சம்பல் கலவையுடன் நன்றாகக் கலக்கும் வரை கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான மலேசியா முட்டை சம்பல் ரெடி. இது சப்பாத்தி, தோசை, இடியாப்பம், சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
