Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா?
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Solar Eclipse In Cancer On 12 August 2026: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த சூரிய கிரகணமானது ஆடி அமாவாசை நாளில் நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணம் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் நிகழவுள்ளது. ஆனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே அதன் சூதக் காலம் இங்கு செல்லாது. இருந்தாலும், ஜோதிடத்தின் படி கிரகணத்தின் விளைவுகளானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக கிரகணத்தின் விளைவானது சுமார் 90 நாட்கள் வரை நீடித்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிட்டும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் நாளை முதல் அடுத்த 90 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அடுத்த 3 மாதம் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடனான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். சேமிப்பு அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் இலக்குகளை அடைவீர்கள். நீண்ட காலமாக புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும் வாய்ப்புள்ளது. தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் அல்லது நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அடுத்த 90 நாட்கள் மீன ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஒரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

