Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்!
Venus Transit In Hastham Nakshatra On 11 August 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். மனதின் காரணியான சந்திரனின் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும் பணப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் தேவையற்ற விஷயங்களுக்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அதிகமாக செலவுகளை செய்யலாம். இதனால் பட்ஜெட் பாழாகி, எதிர்பாராத அளவில் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். எந்த ஒரு முதலீடுகளையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வராமல் சிரமப்படக்கூடும். வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களையோ அல்லது பண பற்றாக்குறையையோ சந்திக்க நேரிடலாம். கைக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம். இது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். எதிர்பாராத நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இந்த செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பது சற்று சவாலாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு பண இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், எந்த ஒரு ரிஸ்க்கையும் இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

