For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலும்புகளை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

மனிதர்கள் நேராக இருப்பதற்கு எலும்புகள் வழிவகை செய்கிறது. உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மன அழுத்தம், உடலியக்கம் போன்றவை எலும்புகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

|

மனிதர்கள் நேராக இருப்பதற்கு எலும்புகள் வழிவகை செய்கிறது. இத்தகைய எலும்புகள் மனிதன் வளர வளர பலவீனமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் வயதான காலத்தில் பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மன அழுத்தம், உடலியக்கம் போன்றவை எலும்புகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே வயதான காலத்தில் எலும்பு பிரச்சனைகள் வராமலிருக்க, இளம் வயதில் இருந்தே எலும்புகளுக்கு பாதுகாப்பு மற்றும் வலிமையளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வர வேண்டும். சரி, இப்போது எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் கால்சியம் எடுக்கவும்

தினமும் கால்சியம் எடுக்கவும்

எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் உடலில் உடலில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு நோய்க்கு உள்ளாகக்கூடும். எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், கீரைகள், ப்ராக்கோலி, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம்.

சூரிய வெளிச்சம்

சூரிய வெளிச்சம்

தினமும் காலையில் 10-15 நிமிடம் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்களில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைட்டமின் டி ஏராளமாக நிறைந்துள்ளது. ஆகவே வைட்டமின் டி சத்தைப் பெற உணவுப் பொருட்களை உண்பதோடு, சூரியக்கதிர்கள் படுமாறு வாக்கிங் அதிகாலையில் செல்ல வேண்டியது அவசியம்.

உப்பைத் தவிர்க்கவும்

உப்பைத் தவிர்க்கவும்

உப்பை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரகத்தின் வழியே உடலில் உள்ள கால்சியம் சத்தானது வெளியேற்றப்பட்டுவிடும். கால்சியம் வெளியேறிவிட்டால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உணவில் உப்பு சேர்ப்பதை வயது அதிகரிக்க அதிகரிக்க குறைத்து வர வேண்டும்.

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைப்பிடிப்பதால் நுரையீரல் தான் பாதிக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். புகைப்பிடிப்பதால், எலும்புகள் கால்சியம் சத்தை உறிஞ்ச முடியாமல் போய், எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

Image Courtesy

சோடாவிற்கு 'நோ' சொல்லவும்

சோடாவிற்கு 'நோ' சொல்லவும்

சோடாவை அதிகம் குடிக்கும் போது, இரத்தத்தில் பாஸ்பேட்டுகளின் அளவு அதிகரித்து, அதனால் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி, சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரித்துவிடும். மேலும் சோடா பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பவை. எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சோடா பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, ஆல்கஹாலை அளவாக, வேண்டுமெனில் வாரம் ஒருமுறை குடிக்கலாம். ஆனால் தினமும் மற்றும் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால், எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி, எலும்பு முறிவு அல்லது வேறு ஏதேனும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

அளவான காபி

அளவான காபி

காபியில் உள்ள காப்ஃபைன், உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, எலும்புகளின் வலிமையைக் குறைக்கும். எனவே ஒரு நாளைக்கு 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம். இல்லாவிட்டால் எலும்புகளின் வலிமையை இழந்து, கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, எலும்புகளும் நல்ல வலிமையையும், உறுதியையும் பெறும். ஆகவே உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்பட நினைத்தால், தினமும் சிறு உடற்பயிற்சியையாவது செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Keep Your Bones Strong and Healthy

Do you know how to keep your bones strong and healthy? Here are some simple ways to keep your bones strong and healthy. Read on to know more.
Desktop Bottom Promotion