எந்த வயதில் எவ்வளவு முறை உடலுறவு கொள்வது நல்லதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு சுகமான இன்பத்தை அனுபவிக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்கும். ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

How Often Should You Have Intercourse According To Your Age (Chart)

ஏனெனில் உடலுறவு செயலானது, மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்பட்டு, மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், சரும அழகை மேம்படுத்தவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்காட்டிஷ் மருத்துவமனை ஆய்வு

ஸ்காட்டிஷ் மருத்துவமனை ஆய்வு

ஸ்காட்டிஷ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுள் யார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உடலுறவு கொண்டார்களோ, அவர்கள் தங்கள் வயதை விட 7-13 வயது குறைந்து இளமையாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இறப்பு விகிதம் குறையும்

இறப்பு விகிதம் குறையும்

தொடர்ச்சியாக உடலுறவு கொள்வது மக்களின் வாழ்நாளை அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண்பவர்கள், அரிதாக உச்சக்கட்ட இன்பம் காண்பவர்களை விட நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

மன அழுத்தமிக்க வாழ்க்கை

மன அழுத்தமிக்க வாழ்க்கை

தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையால், துணையுடன் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் போவதோடு, உடலுறவில் கூட ஈடுபட முடியாமல் போகிறது. இன்றைய கால தம்பதிகளிடம் எவ்வளவு முறை உறவில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டால், சிலர், வாரத்திற்கு 2 முறை எனவும், இன்னும் சிலர் அதற்கும் குறைவாக எனவும் கூறுவார்கள்.

கின்சே நிறுவன ஆராய்ச்சி

கின்சே நிறுவன ஆராய்ச்சி

கின்சே நிறுவனம் இதுக்குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அந்த ஆய்வு முடிவையும், எந்த வயதினர் எவ்வளவு முறை உறவில் ஈடுபட வேண்டும் எனவும் வெளியிட்டது.

18-29

18-29

18 முதல் 29 வயதைச் சேர்ந்தவர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 112 முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

30-39

30-39

30 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 86 முறை உடலுறுவில் ஈடுபடுவது நல்லது.

40-49

40-49

40 முதல் 49 வயதிற்குட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 69 முறை உடலுறவு கொள்வது நல்லது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவில், 13 சதவீத திருமணமான தம்பதியினர் வருடத்திற்கு சிலமுறை மட்டுமே உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், 45 சதவீதத்தினர் மாதத்திற்கு பலமுறை உறவில் ஈடுபட்டிருப்பதும், 34 சதவீதத்தினர் வாரத்திற்கு 2-3 முறையும் மற்றும் 7 சதவீதத்தினர் வாரத்திற்கு 4-க்கும் அதிகமாக உறவில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Often Should You Have Intercourse According To Your Age (Chart)

Do you know how often you have intercourse according to your age? Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter