ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை காண இந்த டயட்டை பின்பற்றுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை. ஒவ்வொரு உடலுறுப்பும் சரியாக வேலை செய்ய வேண்டும் எனில், அவை சீராக இயங்க தனித்தனி ஊட்டச்சத்துக்களின் பங்கு அவசியமாக தேவைப்படுகிறது.

அன்றாட உணவில் ஏன் சிறிது பூண்டு சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா?

செரிமானத்திற்கு நார்ச்சத்து, எலும்புக்கு புரதம், சருமத்திற்கு வைட்டமின் என ஒவ்வொரு உடல் அங்கத்திற்கும், பாகத்திற்கும் ஒவ்வொரு ஊட்டச்சத்தின் பங்கு முக்கியம்.

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!

இவை அனைத்தும் மொத்தமாக உடலுக்கு கிடைக்கப் பெற்றால் தான் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இல்லையேல் உடலில் ஏதேனும் எதிர்வினை தாக்கம் அல்லது கோளாறு ஏற்பட்டு உடல் எடை ஏறக்குறைய தான் செய்யும்.

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

எனவே, உடல் எடை அதிகமாக இருப்பவர்களும், குறைவாக இருப்பவர்களும் உங்கள் தட்டில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

புரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிடக்கூடாது ஏன்? - அறிவியல் பூர்வமான தகவல்கள்!!!

இனி உடல் எடையை கட்டுக்குள் வைக்க எந்தெந்த உணவு எந்தெந்த அளவு உங்கள் தட்டில் பங்குபெற்று இருக்க வேண்டும் என காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்களும், காய்கறிகளும் - 33%

பழங்களும், காய்கறிகளும் - 33%

காய்கறி பழங்களில் தான் அதிகமான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன. தினமும் 400 கிராம் காய்கறி, பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு, உடல் பருமன், நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மாவுச்சத்து உணவுகள் - 33%

மாவுச்சத்து உணவுகள் - 33%

கார்ப்ஸ் உணவுகளின் மூலமாக தான் உடற்சக்தி அதிகமாக கிடைக்கிறது. அரிசி, தானியங்கள் போன்ற உணவுகளை சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தட்டில் மூன்றில் ஒரு பங்கு கார்ப்ஸ் உணவு தான் சிறந்த அளவு. உடல் வேலை அதிகம் இல்லையேல் கார்ப்ஸ் உணவை குறைத்துக் கொள்ளுங்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள் - 15%

பால் மற்றும் பால் பொருட்கள் - 15%

பால் உணவுகளின் மூலமாக தான் அதிகமான அளவில் புரதம், கால்சியம் மற்றும் மினரல்ஸ் கிடைக்கிறது. எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு இது மிகவும் அவசியமானது.

இதர புரத உணவுகள் - 12%

இதர புரத உணவுகள் - 12%

இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ் போன்ற பால் உணவுகளற்ற புரதச்சத்து உணவுகளும் மிகவும் அவசியம். கொழுப்பை கரைக்க, தசைகளை வலிமையாக்க இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.

கொழுப்பும், சர்க்கரை - 7%

கொழுப்பும், சர்க்கரை - 7%

கொழுப்பும், சர்க்கரையும் உங்கள் டயட்டில் அதிகரிக்கும் போது, கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதனால் இதய நலன் சீர்கெடுகிறது. எல்.டி.எல் கொழுப்பு தான் தவிர்க்கப்பட வேண்டியது. எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு உடல் நலனுக்கு அவசியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Eat a Balanced Diet Everyday

Following the eat well plate is the best method to ensure that you are taking all the nutrients in proper proportions to maintain a healthy weight.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter