For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த சில டிப்ஸ்...

|

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் தான் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இக்காலத்தில் நிறைய பேருக்கு எளிதில் தொற்றி, பாடாய் படுத்துகின்றன. இதற்கு என்ன தான் மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தாலும், தற்காலிகமாக நிவாரணம் கிடைக்குமே தவிர, நிரந்தரமாக கிடைக்காது.

எனவே இக்காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை நோயெதிர்ப்பு மண்டலத்தில் சக்தியை மேம்படுத்த சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

அஸ்பாரகஸ், வெள்ளரிக்காய், ப்ராக்கோலி, கீரைகள் போன்றவற்றை மழைக்காலத்தில் உட்கொள்வதால், உடலின் நீர்ச்சத்து சீராக இருப்பதோடு, ஆற்றலுக்கு வேண்டிய போதிய அளவு புரோட்டீன்களும் கிடைக்கும். மேலும் இந்த காய்கறி கீரைகள் எளிதில் செரிமானமாகக்கூடியது என்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

பானங்களில் சர்க்கரை சேர்த்துக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சர்க்கரையானது இரத்த வெள்ளையணுக்களின் அளவைக் குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை பாதித்து, நோய்கிருமிகளின் தாக்கத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

கடல் உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலினுள் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி மற்றும் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகளும் ஏராளமான அளவில் உள்ளது.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

மாதுளம் பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்கும். அதுமட்டுமின்றி, மாதுளையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதோடு, நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

இக்காலத்தில் நிறைய பெண்கள் மற்றும் ஆண்களிடம் மது, புகை போன்ற பழக்கங்கள் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பழக்கம் முதலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை முழுமையாக வலிமையிழக்கச் செய்து, பல்வேறு நோய்களின் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே இந்த பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Give Natural Boost To Immune System

The rainy season may affect the immune system, so it is important to keep yourself hydrated and eat lots of green vegetables, says an expert. Here are some tips. Read on to know more...
Desktop Bottom Promotion