எந்த மருந்தை எடுக்கும் போது, எந்த உணவுப் பொருளை சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் எத்தனை பேர் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதர தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகின்றனர் என்று தெரியுமா? சமீபத்திய நிலவரப்படி, சுமார் 7.8 பில்லியன் மக்கள் இதுப்போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பதோடு, இந்த பிரச்சனைகளுக்கு எடுத்து வரும் மருந்து மாத்திரைகளுடன் தவறான உணவுகளையும் உட்கொண்டு வருவதால் இறப்பையும் சந்தித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என தெரியுமா?

உதாரணமாக, ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள் காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது, அப்படி எடுத்தால் அதில் உள்ள காஃப்பைன், நுரையீரலின் தசைகளுக்கு அதிக வேலைக் கொடுத்து, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும். இதுப்போன்று பல தவறான உணவுகளை, ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வருகின்றனர்.

'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!

இங்கு எந்த மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, எந்த உணவை சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம் & இரத்த அழுத்த மருந்துகள்

வாழைப்பழம் & இரத்த அழுத்த மருந்துகள்

உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்து, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்து வரும் போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. இருப்பதிலேயே வாழைப்பழத்தில் தான் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இதனை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் உட்கொண்டால், இதய செயல்பாடு அதிகரித்து, அதனால் நிலைமை மோசடைய வாய்ப்புள்ளது.

ஆல்கஹால் & வலி நிவாரணிகள்

ஆல்கஹால் & வலி நிவாரணிகள்

நீங்கள் ஆன்டி-ஹிஸ்டமைன்கள், சர்க்கரை நோய் மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எடுப்பவராயில், ஆல்கஹால் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆல்கஹாலை அதிகம் பருகினால், ஆல்கஹாலில் உள்ள உட்பொருட்களை உடைப்பதற்கு கல்லீரல் சற்று அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இப்படி கல்லீரலில் வேலைப்பளு அதிகரித்தால், அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

 பச்சை இலைக் காய்கறிகள் & இரத்த உறைதல் தடுப்பு மருந்து

பச்சை இலைக் காய்கறிகள் & இரத்த உறைதல் தடுப்பு மருந்து

இரத்த உறைவு தடுப்பு மருந்துகளை எடுத்து வருபவர்கள், பச்சை இலைக் காய்கறிகளான கேல், பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுக்கும் போது, இவற்றை உட்கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் கே இரத்த உறைய வழிவகுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

அதிமதுரம் & இதய பிரச்சனைக்கான மருந்துகள்

அதிமதுரம் & இதய பிரச்சனைக்கான மருந்துகள்

இதய பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்து வருபவர்கள், அதிமதுரத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைத்து, நோயாளிகளை பலவீனப்படுத்தி, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.

கிரேப்ஃபுரூட் & கொழுப்புக் குறைப்பு மருந்துகள்

கிரேப்ஃபுரூட் & கொழுப்புக் குறைப்பு மருந்துகள்

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க மருந்துகளை எடுத்து வரும் போது, கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழத்தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாமல் செய்யும். மேலும் கொழுப்பு குறைப்பு மருந்துகள் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையும் உதவும் என்பதால், சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பால் & ஆன்டி-பயாடிக்ஸ்

பால் & ஆன்டி-பயாடிக்ஸ்

ஆன்டி-பயாடிக்குளான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவற்றை உணவு உட்கொள்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அல்லது உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் தான் உட்கொள்ள வேண்டும். அதிலும் இந்த மாத்திரைகளை தண்ணீருடன் தான் எடுக்க வேண்டும். டீ அல்லது பால் உடன் எடுக்கக்கூடாது. ஒருவேளை பாலுடன் எடுத்தால், அந்த மாத்திரையின் சக்தி குறைந்துவிடும்.

எலுமிச்சை & இருமல் மருந்துகள்

எலுமிச்சை & இருமல் மருந்துகள்

உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்து, அதற்கு டெக்ஸ்ரோம்த்ரோபன் உள்ள மருந்துகளை எடுக்கும் போது, சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலமும், டெக்ஸ்ரோம்த்ரோபனும் ஒன்று சேர்ந்தால், அது மயக்க உணர்வை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods And Medications You Should Not Mix

Do you often mix your medications with alcohol? Well, it is not a good idea. Here are some foods you should not mix either, take a look at these foods.
Subscribe Newsletter