For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் கட்டாயம் செய்யக்கூடாத 5 செயல்கள்!

By Maha
|

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒருசில செயல்களைச் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

சரி, அது என்ன செயல்கள் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. இங்கு வயிறு நிறைய ஒருவர் உணவை உட்கொண்ட பின்னர் கட்டாயம் செய்யக்கூடாத 5 செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இனிமேல் அந்த செயல்களைச் செய்யாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்குவது

தூங்குவது

வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது என்பது கேடு விளைவிக்கும். எப்படியெனில் உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

சில ஆண்கள் உணவை உட்கொண்ட உடனேயே சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் இப்படி உணவு உட்கொண்ட பின் 1 சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம். எனவே இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

குளிப்பது

குளிப்பது

நீங்கள் குளிக்க நினைத்தால், உணவு உண்பதற்கு முன்பே குளித்து விடுங்கள். உணவை உண்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாடு தாமதப்படுத்தப்படும். மேலும் வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு பாய ஆரம்பிக்கும்.

பழங்கள் சாப்பிடுவது

பழங்கள் சாப்பிடுவது

எப்போதும் உணவு உண்பதற்கு முன் தான் பழங்களை சாப்பிட வேண்டும். அதுவும் 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் தான் பழங்கள் எளிதில் செரிமானமாகும். அதைவிட்டு உணவு உட்கொண்ட உடனேயே பழங்களை உட்கொண்டால், பழங்கள் எளிதில் செரிமானமாகாமல் அப்படியே தங்கிவிடும். எனவே உணவு உண்ட பின் பழங்களை உட்கொள்ள நினைத்தால், உணவு உண்டு 2 மணிநேரம் கழித்து சாப்பிடுங்கள்.

டீ குடிப்பது

டீ குடிப்பது

சிலர் வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின், உண்ட உணவு சீக்கிரம் செரிமானமாவதற்கு டீ குடிப்பார்கள். ஆனால் அப்படி டீ குடித்தால், டீயானது அசிட்டிக்கை வெளியிட்டு, செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். மேலும் உணவு உட்கொண்ட பின் டீ குடிப்பதனால், உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே இப்பழக்கத்தையும் கைவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Things To Avoid After A Full Meal

Here are some things one should avoid after having a full meal. Read on to know more...
Desktop Bottom Promotion