உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

எப்போது ஒருவரது உடலில் நுரையீரல், இதயம், மூளை, பாதம் மற்றும் கைகள் போன்றவற்றில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது உடலினுள் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பமாகிறது. உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதற்கு இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு படிகங்கள் தான் காரணம்.

ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், அது ஆளையே கொன்றுவிடும். உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க, டயட்டுகளும், உடற்பயிற்சியும் உதவும். சரி, இப்போது இரத்த ஓட்டம் உடலில் மோசமாக இருந்தால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயம்

இதயம்

ஒருவரால் தினசரி செயல்பாடுகளான நடப்பது, மாடிப்படி ஏறுவது போன்றவற்றை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு, இதயம் வலிமையிழந்து இருப்பது காரணமாகும். இதயத்தில் போதிய இரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், இதயம் வலுவிழக்கும். இதன் காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

மூளை

மூளை

மூளையில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், நினைவு திறனை இழப்பது, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் மிகுதியான சோர்வு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கால்கள்

கால்கள்

கால்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், தசைப்பிடிப்புகள், சுருள் சிரை நரம்புகள் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்களில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும் போது, கை, கால்களில் வீக்கம், சோர்வு போன்றவற்றை அனுபவிக்கக்கூடும்.

கல்லீரல்

கல்லீரல்

கல்லீரலில் போதிய இரத்த ஓட்டம் இல்லையென்றால், பசியுணர்வு குறையும், சருமத்தின் நிறம் மாறும் மற்றும் திடீரென்று உடல் எடையை வேகமாக இழக்க நேரிடும்.

இதர அறிகுறிகள்

இதர அறிகுறிகள்

கை, கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருப்பது, தலைமுடி உதிர்வது, வறட்சியான சருமம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்புகள், ஞாபக மறதி போன்ற அறிகுறிகளை ஒருவர் உணர்ந்தால், அவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான அறிகுறிகளை உணரும் போது, சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effects Of Poor Blood Circulation

Blood circulation plays a key role in your overall health. Read on to know about the effects of poor circulation...
Story first published: Thursday, December 22, 2016, 13:15 [IST]
Subscribe Newsletter