For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் படுக்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!

இங்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் ஆப்பிள் சீடர் வினிகர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது எதற்கு என்று தெரியாமல் பலரும் இருப்பார்கள். ஆப்பிள் சீடர் வினிகர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

Drink Apple Cider Vinegar Before Bed Because You Will Treat These Health Conditions

ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகரில் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம் மற்றும் காப்பர் போன்றவையும், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, ஈ, பயோப்ளேவோனாய்டுகள் மற்றும் பெக்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இதனுள் உள்ள அசிட்டிக் அமிலம், உணவுகளில் உள்ள அத்தியாவசிய சத்துக்களை உடல் உறிஞ்ச உதவி புரியும்.

சரி, இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜீரண கோளாறு

அஜீரண கோளாறு

உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் இருந்தால், அது அமில உற்பத்தியை அதிகரிப்பதோடு, வயிற்று உப்புசம், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆனால் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க, விரைவில் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

உடல் பருமன்

உடல் பருமன்

ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து குடிக்க, உடல் பருமன் குறையும்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலி தடுக்கப்படும்.

உயர் இரத்த சர்க்கரை

உயர் இரத்த சர்க்கரை

ஆப்பிள் சீடர் வினிகர் உடலின் இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதனால் டைப்-2 சர்க்கரை நோய் தடுக்கப்படும். அதற்கு இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிக்க வேண்டும்.

தொண்டைப் புண்

தொண்டைப் புண்

ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது மற்றும் இது உடலினுள் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். ஆகவே தொண்டையில் புண் இருப்பவர்கள், 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் விரைவில் தொண்டைப் புண் குணமாகும்.

கால் பிடிப்புகள்

கால் பிடிப்புகள்

உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருக்கும் போது, கால் பிடிப்புக்கள் ஏற்படும். இதைத் தடுக்க இரவில் தூங்கும் முன் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

ஆப்பிள் சீடர் வினிகரில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஏ, ஈ, பி1, பி2 போன்றவை உள்ளது. இவை சைனஸ் சுரப்பியில் உள்ள சளித் தேக்கத்தை வெளியேற்றும். அதற்கு இரவில் படுக்கும் முன் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் நீரில் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை இரவில் தூங்கும் முன் குடித்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

விக்கல்

விக்கல்

நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குடிக்க, விக்கலை உண்டாக்கும் தொண்டையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, அடிக்கடி விக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drink Apple Cider Vinegar Before Bed Because You Will Treat These Health Conditions

Drink apple cider vinegar before bed because you will treat these health conditions. Read on to know more...
Story first published: Saturday, December 24, 2016, 10:39 [IST]
Desktop Bottom Promotion