ஆண்களுக்கு கோனோரியா என்னும் பாலியல் நோய் தாக்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் போது, அதன் காரணமாக பாலியல் நோய்கள் உடலைத் தாக்கக்கூடும். அப்படி தாக்கும் ஓர் பொதுவான ஒரு நோய் தான் கோனோரியா என்னும் மேக வெட்டை நோய். இது பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் தாக்கும்.

பெண்களுக்கு மேக வெட்டை நோய் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!

இந்நோய் தாக்கியிருக்கும் போது, ஒருவர் மற்றொருவருடன் உடலுறவில் ஈடுபடும் போது பரவக்கூடும். இங்கு கோனோரியா என்னும் மேக வெட்டை நோய் ஆண்களை தாக்கியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரவம் வெளிவருவது

திரவம் வெளிவருவது

கோனோரியா என்னும் மேக வெட்டை நோயால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டிருந்தால், ஆண்குறியில் இருந்து வெள்ளை, பச்சை அல்லது மஞ்சள் நிற திரவம் அதிகமாக வெளிவரும். அதுவும் அந்த திரவம் மிகவும் நீர்மமாக இருக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலை உணர்ந்தால், அதுவும் கோனோரியா நோய் தாக்கத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஆனால் இந்த அறிகுறி வேறுசில பிரச்சனைகளுக்கும் உள்ளது என்பதால், இந்நிலையை நீங்கள் உணரும் போது தவறாமல் மருத்துவரை சந்தித்து சோதித்துக் கொள்ளுங்கள்.

ஆண் விதையில் வலி

ஆண் விதையில் வலி

நோய்த்தொற்றுக்களினால், ஆண் விதையினுள் அழற்சி ஏற்பட்டு, அதனால் கடுமையான வலி மற்றும் எரிச்சலை உணரக்கூடும். மேலும் மேல் தோல் வீங்கியும் காணப்படும்.

வலிமிக்க மற்றும் வீங்கிய தொண்டை

வலிமிக்க மற்றும் வீங்கிய தொண்டை

வாய்வழியாக உறவு கொண்டு, மேக வெட்டை நோய்க்கு உள்ளானால், அந்த ஆணுக்கு தொண்டையில் கடுமையான வலியுடன், தொண்டைப் பகுதியில் உள்ள சுரப்பியில் வீக்கமும் ஏற்படும். மேலும் வாய்வழி உறவு கண்களையும் தாக்கும். எனவே கவனமாக இருங்கள்.

தொண்டையில் எரிச்சல்

தொண்டையில் எரிச்சல்

கோனோரியாவால் தாக்கப்பட்டிருந்தல், தொண்டையில் தாங்க முடியாத அளவில் எரிச்சல் சந்திக்க வேண்டியிருக்கும். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் போய்விட்டாலும், தொண்டையில் கடுமையான எரிச்சலை உணர்ந்தால் மருத்துவரை தவறாமல் சந்தியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Symptoms Of Gonorrhoea In Men

Here are some common symptoms of gonorrhoea in men. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter