கருப்பு நிற சோடா பானங்கள் குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வெளியே நாம் எங்கு சென்றாலும், தாகம் எடுக்கும் போது பலரும் வாங்கி குடிப்பது சோடாக்கள் தான். தற்போது உலகில் ஏராளமான சோடா பானங்கள் விற்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பானம் பிடிக்கும்/

பொதுவாக சோடா பானங்களில் ஏராளமான அளவில் சர்க்கரை இருப்பதோடு, அதில் கலோரிகளும் வளமாக நிறைந்திருக்கும். எனவே இதனை அதிகம் பருகுவதைத் தவிர்ப்பதோடு, முற்றிலும் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகிய பற்கள்

அழுகிய பற்கள்

கோக் மற்றும் சோடா பானத்தில் அமிலம் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை அதிகம் குடிப்பவர்களின் பற்கள் சொத்தையாகிறது. அதிலும் அதில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை அரிப்பதோடு, சர்க்கரை பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாகி படுமோசமாக சொத்தையாக்கும். இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அதனால் வாயில் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனர்ஜி எதுவும் இல்லை

எனர்ஜி எதுவும் இல்லை

கோக் மற்றும் சோடா பானங்கள் குடிப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதாக விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது உண்மையா என்று பார்த்தால், அப்படியொன்றும் இல்லை. இதில் வெறும் சர்க்கரை மட்டுமே உள்ளது. இந்த அதிகப்படியான சர்க்கரை உடலில் இன்சுலின் உற்பத்தியில் தடையை ஏற்படுத்தி, நீரிழிவிற்கு வழிவகுப்பதோடு, அதிகம் பசியை ஏற்படுத்தும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

கோக் மற்றும் சோடா பானங்களை அதிகம் குடிப்பவரின் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் வறட்சி ஏற்படும். எனவே இந்த பானத்தை அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

உடல் பருமன்

உடல் பருமன்

புதிய ஆய்வில் உடற்பயிற்சியை மட்டும் செய்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது, அத்துடன் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் எடுக்கும் அளவையும் குறைத்தால் மட்டுமே முடியும் என்று சொல்கிறது. ஏனெனில் சோடா பானங்களில் உள்ள சர்க்கரை உடல் பருமன், மெட்டபாலிக் குறைபாடு, கருப்பையில் கட்டிகளை உருவாக்கி, பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்.

புரோமைன்

புரோமைன்

புரோமைன் என்பது பாஸ்தா மற்றும் குளிர் பானங்களில் உள்ள ஒரு வகையான வெஜிடேபிள் ஆயில். இதனை அளவுக்கு அதிகமாக பருகினால், அதன் காரணமாக ஞாபக மறதி, நரம்பு பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

BPA

BPA

கோக் மற்றும் சோடா பான டின்களில் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தும் BPA என்னும் பொருள் உள்ளது. இப்படி டின் டின்னாக வாங்கி பருகினால், அதனால் அந்த நச்சுமிக்க பொருள் இதய நோய், தைராய்டு பிரச்சனைகளை விரைவில் வரச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coke And Soda Drinks: Why You Should Avoid It

Here are some reasons why you should avoid soda and coke. Read on to know more...
Story first published: Wednesday, January 27, 2016, 16:32 [IST]