For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நன்கு தூங்கி எழுந்த பின்னரும் களைப்பை உணர்வது ஏன் எனத் தெரியுமா?

By Maha
|

ஓய்வு ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய ஓய்வை தூக்கத்தின் மூலம் தான் பெற முடியும். சிலர் இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் எழுந்த பின் மிகுந்த களைப்பை உணர்வார்கள். அது ஏன் என்றும் தெரியாமல் இருப்பார்கள். நீங்கள் அப்படி ஏதேனும் உணர்ந்தால், அதனை சாதாரணமாக விடாதீர்கள்.

ஏனெனில் மிகுந்த களைப்பு பல பிரச்சனைகளுக்கு அறிகுறியாகும். எனவே ஏன் இவ்வளவு களைப்பு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் மிகுந்த சோர்வை உணர்வதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதட்டம் அல்லது டென்சன்

பதட்டம் அல்லது டென்சன்

நீங்கள் நன்கு தூங்கி எழுந்த பின்னரும் சோர்வை உணர்வதற்கு பதட்டம் அல்லது டென்சனும் ஓர் முக்கிய காரணம். ஆம், ஏனெனில் நீங்கள் அதிகமாக டென்சன் ஆகும்போது, சாதாரண ஹார்மோன் நிலையில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உங்கள் தூக்கத்தின் தரம் குறையும். எனவே டென்சன் ஆவதைக் குறைத்துக் கொண்டு, இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்துங்கள். இதனால் நல்ல தூக்கம் கிடைத்து, மறுநாள் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

தவறான நிலை

தவறான நிலை

நீங்கள் தூங்கும் போது தவறான நிலையில் தூங்கினால், அதுவும் தூங்கி எழுந்த பின்னர், உங்களுக்கு களைப்பை ஏற்படுத்தும். ஏனெனில் தவறான நிலையில் தூங்கும் போது, உடல் வலி ஏற்படுவதோடு, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல், தூக்கம் பாதிக்கப்படும். எனவே சரியான நிலையில் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தூங்கும் நேரம்

தூங்கும் நேரம்

நீங்கள் இரவில் தாமதமாக தூங்கினால், அதுவும் உங்கள் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் செய்யும். ஒருவருக்கு 7-8 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியமானது. இந்த அளவு தூக்கத்தை மேற்கொண்டால் தான், உடலுக்கு நல்ல ஓய்வு கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

குறட்டை

குறட்டை

குறட்டை நம்மை அறியாமல் வருவது தான். இருப்பினும் இந்த குறட்டை நமக்குத் தெரியாமலேயே நம் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கிறது. மேலும் குறட்டை, தூங்கும் போது நம் உடலுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து, தூங்கும் போது உடலுக்கு வேண்டிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாமல் செய்யும். இதன் காரணமாகத் தான் தூங்கி எழுந்த பின்னரும் நாம் களைப்பை உணர்கிறோம்.

மருத்துவ பிரச்சனைகள்

மருத்துவ பிரச்சனைகள்

நம் உடலில் உள்ள சில பிரச்சனைகளும், அந்த பிரச்சனைகளுக்கு நாம் எடுத்து வரும் மருந்துகளும் தூக்க அளவையும், தரத்தையும் பாதிக்கும். உதாரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிப்பது இரவில் நல்ல தூக்கத்தை வழங்காது. அதுப்போல் சில மருந்துகள் நம்மை விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ளும். இதனால் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பின் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக தூங்கி எழுந்த பின் களைப்பை உணர நேரிடுகிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

நன்கு தூங்கி எழுந்த பின்னர் களைப்பை உணர்வதற்கு உடல் பருமனும் ஓர் காரணம் தான். எப்படியெனில் உடல் பருமன் சாதாரண ஹார்மோன்களின் அளவை பாதிப்பதால், நிம்மதியான தூக்கம் பெறுவதில் இடையூறை ஏற்படுகிறது. இதன் காரணமாகத் தான் குண்டாக இருப்பவர்கள், தூங்கி எழுந்த பின்னும் களைப்பை உணர்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

After Waking Up Why Do We Feel Tired?

Many of us off late feel tired when we wake up. Do you know the reasons? Well, we tell you what are the reasons for tiredness in people when they wake up.
Story first published: Monday, January 25, 2016, 10:12 [IST]
Desktop Bottom Promotion