கொசுக்களின் உயிரைப் பறிப்பதற்கு பதிலாக மனிதர்களின் உயிரைப் பறிக்கும் கொசுவர்த்தி- அதிர்ச்சி தகவல்

Posted By:
Subscribe to Boldsky

கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகரப்புறங்களிலும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் தங்கள் வீடுகளை எப்போதும் மூடி வைத்தவாறு இருக்கின்றனர். மேலும் கடைகளில் விற்கப்படும் கொசுக்களை விரட்டும் மெஷின்களை வாங்கி மாலை வந்ததும் அதனை வீட்டில் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் அவற்றால் கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்தவாறு தெரியாததால், இன்னும் பல வீட்டுகளில் கொசுவர்த்தியை வீட்டில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

கொசுவர்த்தியை வீட்டில் பயன்படுத்தி, அதிலிருந்து வெளிவரும் புகையை அதிக நேரம் சுவாசித்து வந்தால் மரணத்தை தழுவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்காக கொசுக்களை விரட்டும் கொசுவர்த்தியை பயன்படுத்தாமல், அதன் கடியை தாங்கிக் கொள்ள வேண்டுமா என்று கேட்கலாம். ஆனால் அதற்கும் ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
100 சிகரெட்டிற்கு சமம்

100 சிகரெட்டிற்கு சமம்

ஆய்வு ஒன்றில் தொடர்ந்து 8 மணிநேரம் கொசுவர்த்தியின் புகையை சுவாசித்தவாறு இருப்பது என்பது, 100 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று தெரியவந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

தாய்வானில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில், தாய்வான் மக்களில் 50 சதவீத மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் யாரும் சிகரெட் பிடித்ததால் இறக்கவில்லை. மாறாக இவர்களின் வீட்டில் அன்றாடம் கொசுவர்த்தி ஏற்றி வந்ததால், அதன் புகையை நுகர்ந்து நுரையீரல் புற்றுநோயால் இறக்க நேர்ந்தது தெரிய வந்துள்ளது.

இதர சுவாச பிரச்சனைகள்

இதர சுவாச பிரச்சனைகள்

கொசுவர்த்தி புகையை தொடர்ந்து சுவாசித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர நுரையீரல் பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடூம்.

கொசுக்களை எப்படி விரட்டுவது?

கொசுக்களை எப்படி விரட்டுவது?

கொசுவர்த்தி ஏற்றக்கூடாதெனில் வேறு எப்படி கொசுக்களை விரட்டுவது என்று பலரும் கேட்கலாம். அதற்கு அருமையான சில வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கொசுக்களில் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கொசு வலை

கொசு வலை

கொசுக்களில் தொல்லையில் இருந்து விடுபட கொசுவலையை வீட்டின் ஜன்னலில் பொருத்திக் கொள்வது நல்ல பாதுகாப்பைத் தரும்.

பூண்டு

பூண்டு

அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வந்தால், அதன் மணத்தால் கொசுக்கள் அண்டுவதைத் தவிர்க்கலாம். மேலும் பூண்டு இதயத்திற்கு மிகவும் நல்லது.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டு இரவில் படுத்தால், கொசுக்கள் கடிப்பதில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why The Mosquito Coil In Your Home Might Actually Kill You – A Scientific Report

If you have the habit of lighting mosquito coils every night to wipe out mosquitoes, then hold on. You might as well wipe out yourself too.
Subscribe Newsletter