காலையில் எழுந்ததும் ஏன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே தண்ணீர் அதிகம் குடித்தால் நல்லது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிப்பதை விட, அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

அதிலும் இப்படி தண்ணீர் குடிப்பதால், உடல் வலி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பலவற்றுக்கும் தீர்வு கிடைக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! மேலும் ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் இந்த முறை மிகவும் பிரபலமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அறிவியல் பூர்வமாகவும் இந்த முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சரி, இப்போது காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் ஏன் அவசியமானது?

தண்ணீர் ஏன் அவசியமானது?

உடலானது 70% நீரால் சூழப்பட்டுள்ளது. அதிலும் தசைகளானது 75 சதவீதமும், இரத்தம் 70 சதவீதமும் கொண்டது. இப்படி இருப்பதால் தான் தண்ணீர் குடிப்பது மிகவும் இன்றியமையாதது என்று சொல்கின்றனர். மேலும் எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிடுவதற்கு முன்பும் தண்ணீர் குடித்தால், உடலின் உள்ளமைப்பு சுத்தமாகும். இப்படி உடல் சுத்தமானால், உடலால் சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

புது இரத்தம் உற்பத்தியாகும்

புது இரத்தம் உற்பத்தியாகும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலில் புது இரத்தம் உற்பத்தியாகும். இப்படி புது இரத்தம் உடலில் உற்பத்தியானால், நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் பிரச்சனையில்லாமல் இருக்கும்.

சருமம் ஆரோக்கியமாகும்

சருமம் ஆரோக்கியமாகும்

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

காலையில் எழுந்ததும் முதல் வேளையாக தண்ணீர் குடிப்பதால், நிணநீர் மண்டலத்தில் உள்ள இரத்த வெள்ளையணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும்.

எடை குறையும்

எடை குறையும்

தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும்.

நோய்கள் குணமாகும்

நோய்கள் குணமாகும்

தண்ணீர் மிகவும் சிறப்பான மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பொருள். அத்தகைய தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது வாந்தி, புற்றுநோய், தொண்டை பிரச்சனைகள், கண் பிரச்சனைகள், சிறுநீராக பிரச்சனைகள், டிபி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நாள்பட்ட மூட்டு வலி போன்ற நோய்கள் குணமாகும்.

குறிப்பு

குறிப்பு

காலையில் வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்து 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இப்படி தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலை நோய்களின் தாக்குதலின்றி பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Should You Drink Water Right After You Wake Up

Drinking water in empty stomach in the morning can be immensely beneficial for the body. Learn more health benefits of drinking water on empty stomach in the morning.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter