வெள்ளை பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பெரும்பாலானோர் சாண்ட்விச், டோஸ்ட் போன்றவற்றை தான் தேர்ந்தெடுத்து அதிகம் சாப்பிடுகிறார்கள். இப்படி செய்யும் சாண்ட்விச், டோஸ்ட் போன்றவை வெள்ளை பிரட் கொண்டு செய்யப்படுவதாகும்.

தினமும் பிரட் சாப்பிட வேண்டாம் என்பதற்கான காரணங்கள்!!!

ஆனால் வெள்ளை நிற பிரட் மிகவும் தீமையானது. இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்.

பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது? பல தானிய பிரட்டா அல்லது கோதுமை பிரட்டா?

சரி, இப்போது வெள்ளை நிற பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து குறைவு

நார்ச்சத்து குறைவு

ஒரு துண்டு வெள்ளை பிரட்டில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆனால் முழுதானிய பிரட்டில் 2 கிராம் உள்ளது. பொதுவாக செரிமானம் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். நார்ச்சத்து இருக்கும் உணவை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவுகிறது. இவ்வளவு முக்கியமான நார்ச்சத்து வெள்ளை பிரட்டில் குறைவாக இருப்பதால், அதனை அதிகம் எடுப்பதை தவிர்த்து, முழுதானிய பிரட்டை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

கனிமச்சத்துக்கள் குறைவு

கனிமச்சத்துக்கள் குறைவு

வெள்ளை பிரட்டை சுத்திகரிக்கும் போது, அது நார்ச்சத்துக்களை மட்டுமின்றி, கனிமச்சத்துக்களையும் இழக்க வைக்கிறது. அதில் இரும்புச்சத்தை குறைத்து, இரத்த சோகையை ஏற்படுத்தும். மேலும் வெள்ளை பிரட்டில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர் மற்றும் மாங்கனீசு போன்றவையும் குறைவாக என்னது. அதனால் உடலில் மேற்கூறிய சத்துக்களின் குறைபாடு ஏற்பட்டு, பல்வேறு மோசமான விளைவுகள சந்திக்கக்கூடும். முக்கியமாக வெள்ளை பிரட்டுகளை அன்றாடம் அதிகம் எடுத்து வந்தால் இந்த நிலை ஏற்படும்.

அளவான வைட்டமின் பி

அளவான வைட்டமின் பி

மைதாவை சுத்திகரித்து வெள்ளை பிரட் செய்யும் போது, அதில் இருந்து வைட்டமின் பி அதிக அளவில் இழக்கப்படுகிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தான் வளர்ச்சி, ஆற்றல், புரோட்டீன், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தை மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க, செரிமான பாதையை ஆரோக்கியமாக வைக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுறச் செய்ய மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. வைட்டடமின் பி குறைபாடு ஏற்பட்டால், அதனால் இரத்த சோகை, அதிகப்படியான சோர்வு, பசியின்மை, மன இறுக்கம், தசைப்பிடிப்பு மற்றும் கால்களில் குடைச்சல் போன்றவை ஏற்படும். எனவே வைட்டமின் பி கூட குறைவாக உள்ள வெள்ளை பிரட்டை சாப்பிடுவது வேஸ்ட் எனலாம்.

குறைவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்

குறைவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்

முழு தானிய பிரட்டில் ஒன்றிற்கு அதிகமான பைட்டோ கெமிக்கல்களான லுடீன் மற்றும் ஸீக்ஸாத்தைன் உள்ளது. ஆனால் வெள்ளை பிரட்டில் எதுவும் இல்லை. மேலும் இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்களும் ஒருவகையான கரோட்டீனாய்டுகள். இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக ப்ரீ ராடிக்கல்களால் எவ்வித பாதிப்பும் அடையாமல் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கெட்டது

நீரிழிவு நோயாளிகளுக்கு கெட்டது

பொதுவாக மைதாவில் கலோரிகள், சர்க்கரை போன்றவை அதிகம் இவற்றைக் கொண்டு செய்யப்பட்ட பிரட்டை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், அதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, அது நீரிழிவு நோயாளிகளின் நிலைமையை மோசமாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Are the Disadvantages of Eating White Bread?

Here are some of the disadvantages of eating white bread. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter