தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். மேலும் மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள். எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

இங்கு அப்படி கோடையில் பலரும் அதிகம் குடிக்க நினைக்கும் மோரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய...

வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய...

நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.

கொழுப்பைக் கரைக்கும்

கொழுப்பைக் கரைக்கும்

மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்

செரிமானத்தை அதிகரிக்கும்

மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உடல் வறட்சியைத் தடுக்கும்

உடல் வறட்சியைத் தடுக்கும்

மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்கும். அத்தகையவர்களால் பால் பொருட்கள் எதையும் சாப்பிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள் கால்சியம் சத்தை பால் பொருட்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்களில் இருந்து பெற வேண்டும். ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மோர் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. மேலும் இயற்கையான கால்சியத்தை மோரில் இருந்து பெறலாம்.

பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள்

பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள்

மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

அசிடிட்டி

அசிடிட்டி

மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தயிர் - 1/2 டம்ளர்

குளிர்ந்த நீர் - 1 டம்ளர்

உப்பு - தேவையான அளவு

மிளகு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

இஞ்சி - 1 இன்ச்

கறிவேப்பிலை - 2-3 இலைகள்

கொத்தமல்லி - சிறிது

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

செய்முறை:

மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாட்டிலில் தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி, அதனை மூடி நன்கு குலுக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை குலுக்கினால், மோர் ரெடி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Health Benefits Of Drinking Buttermilk

Here are top health benefits of drinking buttermilk. Take a look... 
Story first published: Monday, March 16, 2015, 17:08 [IST]
Subscribe Newsletter