நீங்க எலுமிச்சை ஜூஸ் அதிகமா குடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பார்கள். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் தான் அதிக அளவில் இந்த ஜூஸைக் குடிப்பார்கள். எலுமிச்சை ஜூஸைக் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகவும், சருமம் பொலிவுடனும் இருக்கும். மேலும் எலுமிச்சையில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

தினமும் சிறிது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆனால் அந்த எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக ஒருவர் குடிக்கும் போது, ஏராளமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே எலுமிச்சை ஜூஸை ஒரு டம்ளர் குடித்து, மறு டம்ளரைக் குடிக்கும் முன் சற்று யோசியுங்கள். சரி, இப்போது எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கூச்சம்

பற்கூச்சம்

எலுமிச்சையில் உள்ள அசிடிக் ஆசிட் அளவுக்கு அதிகமாக பற்களில் பட்டால், எனாமல் குறைந்து வேர்கள் வெளியே தெரிய ஆரம்பித்து பற்கூச்சம் ஏற்படும். எனவே எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதைத் தவிர்ப்பதோடு, எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அந்த ஜூஸ் பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தி குடியுங்கள்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் அசிட்டிக் ஆசிட் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்று உப்புசம்

வயிற்று உப்புசம்

அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள அசிட்டிக் ஆசிட் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் இது சளிச் சவ்வுகளில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் உடல் வறட்சி

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் உடல் வறட்சி

எலுமிச்சையில் உள்ள சிறுநீர்ப்பெருக்க பண்பால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி அதிக அளவில் சிறுநீரைக் கழித்தால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, சோடியத்தின் அளவும் குறையும். சோடியத்தின் அளவு குறைந்தால், நீர்ச்சத்தின் அளவும் குறையும். எனவே எலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்

இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய்

பொதுவாக இந்த நோயானது கொழுப்பு நிறைந்த உணவுகள், கார உணவுகள் அல்லது அசிட்டிக் உணவுகளை உட்கொள்ளும் போது தூண்டப்படும். எலுமிச்சையில் அசிட்டிக் ஆசிட் அமிலம் உள்ளதால், இது உணவுக்குழாய் அகவுறையில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Drinking Lemon Juice

Check out the list of Side Effects of drinking Lemon Juice in this article today. Read on to know more about the bad effects of drinking lemon juice.