உணவில் ஏன் பிரியாணி இலையை சேர்க்கிறோம் என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பலரும் உணவில் பிரியாணி இலை வெறும் நறுமணத்திற்காகத் தான் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் பிரியாணி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் பிரியாணி இலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

மேலும் பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் போது, அதனால் எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

சரி, இப்போது பிரியாணி இலையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு நல்லது

செரிமானத்திற்கு நல்லது

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தூக்கத்தைத் தூண்டும்

தூக்கத்தைத் தூண்டும்

பிரியாணி சாப்பிட்டதும் பலருக்கு ஏன் தூக்கம் வருகிறது என்று தெரியுமா? அதில் உள்ள பிரியாணி இலை தூக்கத்தைத் தூண்டும் என்பதால் தான். நீங்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை இரவில் தூங்கும் முன் குடித்து வர, நல்ல தூக்கம் வரும்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அதனைக் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

புற்றுநோய் எதிர்ப்பு பொருள்

புற்றுநோய் எதிர்ப்பு பொருள்

பிரியாணி இலையில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடலில் ஏற்படும் பல மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் தலை வலிக்கும் போது, அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், 1 நிமிடத்தில் தலை வலி போய்விடும்.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்நீரை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Health Benefits Of Bay Leaf

In todays article we at Boldsky are listing few amazing health benefits of bay leaf. Read on to know more about it.
Subscribe Newsletter