முட்டையின் மஞ்சள் கருவை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

முட்டையில் அதிக சத்து உள்ளது என்று பலரும் அறிந்த ஒன்று தான். தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் முட்டை சாப்பிடும் போது, பலர் அதன் மஞ்சள் கருவைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். ஏன் என்று கேட்டால், முட்டையில் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் உள்ளது என்று சொல்வார்கள்.

'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா?

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா, முட்டையின் வெள்ளைக்கருவை விட மஞ்சள் கருவில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த மஞ்சள் கருவை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடும் போது, சுவையாக இருப்பதுடன், இன்னும் அதிகமான நன்மையைப் பெறலாம். சரி, இப்போது மஞ்சள் கருவை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா!!!

முட்டையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

மஞ்சள் கருவில் வெள்ளைக் கருவை விட அதிக அளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சொல்லப்போனால் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மட்டும் தான் உள்ளது.

வைட்டமின் கே

வைட்டமின் கே

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் எலும்புகளுக்கு நல்லது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.

மூளைக்கு நல்லது

மூளைக்கு நல்லது

முட்டையின் மஞ்சள் கருவில் கோலைன் என்னும் மூளையின் ஆரோக்கியத்திற்கு மற்றும் செயல்பாட்டிற்கு தேவையான பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் கோலைன் தான் மன இறுக்கம் மற்றும் அல்சைமர் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

ஆற்றலை அதிகரிக்கும்

ஆற்றலை அதிகரிக்கும்

முட்டையின் மஞ்சள் கருவை உட்கொண்டு வந்தால், நாள் முழுவதும் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற மார்பக மற்றும் குடல் புற்றுநோயைத் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது.

இரத்தத்திற்கு நல்லது

இரத்தத்திற்கு நல்லது

முட்டையில் கோலைன் என்னும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருள் உள்ளது. கோலைன், இரத்த நாளங்களை பாதிக்கும் ஹோமோசைஸ்டீனை ஒழுங்குப்படுத்தும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

பலரும் முட்டையின் மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் கல்லீரல் அன்றாடம் உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வதோடு, முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்ளும் போது, கல்லீரல் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைத்துவிடும். எனவே உடலில் சீரான அளவில் தான் கொலஸ்ட்ரால் பராமரிக்கப்படும்.

காயங்கள்

காயங்கள்

முட்டையில் உள்ள அதிகப்படியான கோலைன் சத்தால், உடலின் உட்பகுதியில் ஏற்படும் உள் காயங்களைத் தடுக்கும்.

பக்கவாதத்தைத் தடுக்கும்

பக்கவாதத்தைத் தடுக்கும்

முட்டையின் மஞ்சள் கரு இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி, பக்கவாதத்தைத் தடுக்கும்.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

முக்கியமாக முட்டையின் மஞ்சள் கரு கண்களுக்கு நல்லது என்பது தெரியுமா? அதிலும் வயதான பின் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை முட்டையின் மஞ்சள் கரு தடுக்கும். குறிப்பாக கண் புரை ஏற்படுவதை முட்டையின் மஞ்சள் கரு தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Eat Yolks

Do you eat the yolk from an egg? If no,then it is time you add the yolk to your diet as it helps to keep you healthier. Here are 10 reasons to eat yolks.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter