மோசமான குடலியக்கத்தால் குடல் புற்றுநோய் வராமல் இருக்க சில டிப்ஸ்....

Posted By:
Subscribe to Boldsky

புற்றுநோய்களில் மரணம் வரை கொண்டு செல்லும் ஒரு வகை தான் பெருங்குடல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய். மரபியல் காரணிகள் இது உருவாக முக்கிய பங்கை வகிக்கிறது. இது பெருங்குடலில் அசாதாரண செல் வளர்ச்சியை உருவாக்கி, அதனால் குடல் செயலிழப்பை ஏற்படுத்துவதோடு, உடலின் மற்ற பாகங்களுக்கும் இது பரவச் செய்யும்.

பொதுவாக இது 50 வயதிற்கு மேல் தான் ஒருவரைத் தாக்கும். ஆனால் தற்போது குடல் புற்றுநோய் ஆண்கள் பெண்கள் என இருபாலரையும், எந்த வயதிலும் தாக்குகிறது. இதற்கு காரணம் நம் உண்ணும் உணவுகளும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான். மேலும் இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணமாக்கிவிடலாம். ஆனால் அதுவே முற்றிய நிலையில் கவனித்தால், எவ்வித பிரயோஜமும் இல்லை.

அதற்கு குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்வதோடு, இன்றைய கால தலைமுறையினர் ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், நிச்சயம் குடல் புற்றுநோயில் இருந்து விடுபடுவதோடு, அதன் தாக்கத்தில் இருந்தும் விலகி இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

இரத்தக்கசிவுடன் மலம் வெளியேறுவது, எடை குறைவு, மலக்குடல் இரத்தக்கசிவு, குடல் கோளாறுகள், சோர்வு மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் போன்றவை குடல் புற்றுநோயின் அறிகுறிகள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் எபிகேட்டசின்கள் அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை வரும் அபாயத்தைத் தடுப்பதோடு, புற்றுநோய் செல்கள் மற்ற இடங்களுக்கு பரவுவதையும் தடுக்கும். எனவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை இக்கால தலைமுறையினர் அருந்தி வருவது நல்லது.

பூண்டு

பூண்டு

பூண்டு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, புற்றுநோய் செல்கள் பரவுவதையும் தடுக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். இது தான் பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்து, புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதை எண்ணெய்

ஆளிவிதை எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஏராளமாக உள்ளதால், இது அழற்சி உண்டாக்கும் மூலக்கூறுகளைத் தடுத்து, புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும். மேலும் ஆளிவிதை எண்ணெயில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், உடலின் அனைத்து செயல்பாடுகளையும் சீராக பராமரிக்க உதவும்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. மேலும் சால்மன் மீன் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தையும் குறைக்கும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

மற்ற உணவுப் பொருட்களை விட ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் இப்பழத்தை உட்கொண்டு வந்தால், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும். இதனால் எந்த வகை புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கான மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மேலும் பசலைக்கீரை குடலியக்கத்தை அதிகரித்து, குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளைத் தடுக்கும். எனவே அடிக்கடி பசலைக்கீரையை உட்கொண்டு வந்தால், குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ways To Treat Colon Cancer

In this article, we at Boldsky are listing out some of the natural ways to treat colon cancer.
Story first published: Saturday, December 26, 2015, 11:32 [IST]
Subscribe Newsletter