பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது? பல தானிய பிரட்டா அல்லது கோதுமை பிரட்டா?

Posted By: Super
Subscribe to Boldsky

பசியை உடனடியாக ஆற்றுவதற்கு பல உணவுகள் உள்ளது. அப்படி கிடைக்கும் உடனடி உணவுகளில் முக்கியமான ஒன்று தான் பிரட். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பொருளாக விளங்குகிறது. உடல் சுகவீனம் போன்றவைகளுக்கு கூட இதையே மிதமான உணவாக பயன்படுத்தலாம். இப்படி வசதிகளை மட்டும் தான் கொண்டுள்ளதா என்று நீங்கள் கேட்டால் அது தான் இல்லை. இதில் பல வித உடல்நல பயன்களும் உள்ளது.

இருப்பினும் எதை வைத்து செய்யப்படுகிறதோ அதை பொறுத்து தான் பிரட்டின் ஆரோக்கியம் விளங்கும். மேலும் சந்தையில் இன்று பல்வகையான பிரட்கள் கிடைப்பதால் எது நல்லது, எது கெட்டது என்பதை கண்டுபிடித்து தேர்வு செய்வதே கடினமான ஒன்றாக உள்ளது. முழு கோதுமையால் செய்யப்படும் பிரட் மிகவும் ஆரோக்கியமானது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதையும் மீறி பல வித தானியங்களால் செய்யப்பட்ட பிரட்டில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. பல வித தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட் என இரண்டிற்குமே செயற்பாடு குறைவே. ஆனால் இரண்டிலுமே இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

பல தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழு தானியம்

முழு தானியம்

உங்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள அருமையான வழியாக விளங்குகிறது முழு தானிய பிரட். கம்பு, வாற் கோதுமை, பாப்பரை மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை பல தானிய பிரட்டில் பொதுவாக காணலாம். முழு தானியங்களை உண்ணுபவர்கள் குறைவான எடையுடன், குறைந்த BMI மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கொண்டிருப்பார்கள்.

தானியங்கள் வளமையாக உள்ள உணவை உட்கொள்வதால், இதய குழலிய நோய்கள், சர்க்கரை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும். மறுபுறம், முழு கோதுமை பிரட் என்றால், மொத்தமே ஒன்று அல்லது இரண்டு முழு தானியங்களால் மட்டுமே செய்யப்பட்டதாகும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

முழு கோதுமை பிரட் மற்றும் பல தானிய பிரட் என இரண்டுமே உங்கள் உணவில் அதிக நார்ச்சத்தை கொண்டு சேர்க்கும். அதற்கு காரணம் கோதுமை தவிடு அல்லது ஓட்ஸ் தவிடு வடிவில் இவையிரண்டுமே கூடுதல் நார்ச்சத்தால் நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 4 கிராம் அளவிலான நார்ச்சத்து உள்ளது.

உணவில் நார்ச்சத்து வளமையாக இருந்தால், உங்கள் இரத்த கொதிப்பும் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்திடவும் நார்ச்சத்து உதவிடும். கூடுதல் நார்ச்சத்திற்கு கம்பு மற்றும் திணை அடங்கிய பிரட்டை உண்ணலாம்.

க்ளைசீமிக் இன்டெக்ஸ்

க்ளைசீமிக் இன்டெக்ஸ்

பல தானிய பிரட்டில் தவிடு உள்ளது. மேலும் அதிலுள்ள நோய் நுண்மம் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அளவை குறைவாக வைத்திருக்கும். குறைந்த அளவிலான க்ளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் என்றால் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் வாதம் ஏற்படுவதற்கான இடர்பாடுகளும் குறைவாக இருக்கும். பல தானிய பிரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்களும் இருப்பதால் இயக்க உறுப்புகள் பாதிப்பில் இருந்து அணுக்களை பாதுகாக்கும்.

மறுபுறம் முழு கோதுமை பிரெட்டில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சரிப்பட்டு வராது.

கலோரி எண்ணிக்கை

கலோரி எண்ணிக்கை

கலோரி எண்ணிக்கை என வரும் போது பல தானிய பிரட்டிற்கும், முழு கோதுமை பிரட்டிற்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இருக்க போவதில்லை. பல தானிய பிரட்டில் உள்ள முக்கால்வாசி கலோரிகள் அதிலுள்ள கார்போஹைட்ரேட் பொருட்களில் இருந்து தான் வருகிறது. முழு கோதுமை பிரட்டில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் கலோரிகளுக்கு வழிவகுக்கும். ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 69 கலோரிகள் உள்ளது. அதுவே ஒரு துண்டு முழு கோதுமை பிரட்டில் 66 கலோரிகள் உள்ளது.

டிப்ஸ்

டிப்ஸ்

* பிரட் வாங்கும் போது அதிலுள்ள சேர்வையுறுப்புக்கள் சோதித்து, அதன் லேபிளையும் நன்றாக படியுங்கள். இந்த சேர்வையுறுப்புக்களில் முழு தானியங்கள் பட்டியளிடப்பட்டுள்ளதா என்பதையும் பாருங்கள்.

* நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்தது 3 கிராம் அளவிலாவது நார்ச்சத்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு காரணம் சந்தையில் கிடைக்கும் பல பிரட்களில் நார்ச்சத்து 1 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது.

* நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்த அளவிலாவது முழு தானியங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Multigrain vs Whole Wheat Bread.. Which Is Better?

A whole wheat bread may encourage you to think that you are buying the healthiest, but multigrain bread also offers many essential nutrients. Let us have a look at the nutrient value in multigrain and whole wheat breads.