For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு சூடு பிடிச்சுருக்கா? அதை சரிசெய்ய சில எளிய வழிகள்!!!

By Maha
|

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரியக்கதிர்கள் நம்மை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து, உடல் அதிக வெப்பம் அடையும். இப்படி உடல் வெப்பம் அதிகமானால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதில் தலைவலி முதல் முகப்பரு, பிம்பிள் போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

அதுமட்டுமின்றி, பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலை உணர்வார்கள். அப்போது தான் பலரும் உடல் சூடு பிடித்துள்ளது என்று தெரிந்து கொள்வார்கள். மேலும் இந்த உடல் சூட்டை எப்படி தணிப்பது என்றும் யோசிப்பார்கள். உங்களுக்கும் அப்படி உடல் சூடு பிடித்திருந்தால், இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

கோடையில் மற்ற காலங்களை விட அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் நம் சருமத்தில் அதிக அளவில் படுவதால், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். மேலும் நீர்ச்சத்து குறைவதால் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடித்து வந்தால், அவை உடல் சூட்டைத் தணிக்கும்.

முலாம் பழம்

முலாம் பழம்

கோடையில் அதிகம் கிடைக்கும் முலாம் பழத்தை வாங்கி, அதனை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும், பொட்டாசியமும், கோடை பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். குறிப்பாக கோடையில் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையான ஒன்று. அதற்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதன் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே வாயில் போட்டு விழுங்க வேண்டும். இதனாலும் உடல் வெப்பம் குறையும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

நல்ல காரமான உணவுகளை கோடையில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும். எனவே கோடையில் எப்போதும் அளவான காரம் கொண்ட உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

இளநீர்

இளநீர்

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதிலும் இதனை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் பார்லியை 2 கப் நீரில் போட்டு நன்கு 1/2 மணிநேரம் கொதிக்க விட்டு, அதனை இறக்கி குளிர வைத்து, பின் அதனை நாள் முழுவதும் சீரான இடைவெளியில் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

சந்தனம்

சந்தனம்

சந்தனம் மற்றும் மூல்தானி மெட்டி இரண்டிற்குமே உடல் வெப்பத்தை தணிக்கும் திறன் உள்ளது. எனவே இவற்றில் பால் சேர்த்து, அவ்வப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், உடல் வெப்பம் குறையும்.

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர்

சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி, பின் அந்த நீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

பிராணயாமம்

பிராணயாமம்

தினமும் காலையில் எழுந்ததும் பிராணயாமம் என்னும் யோகாவை செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும். எப்படியெனில் பிராணயாமம் செய்யும் போது, நன்கு ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், உடலானது குளிர்ச்சி அடைந்து, மன அழுத்தமும் நீங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Reduce Body Heat – Top Ten ways

Here are few ways to reduce body heat. Want to know how to reduce body heat naturally? Check out...
Desktop Bottom Promotion