For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிரை இழக்கக்கூடும்?

By Maha
|

அன்றாடம் இரவில் படுக்கும் முன் பலரும் சாப்பிடும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அத்தகைய வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் பொட்டாசியம் தான் அதிக அளவில் வாழைப்பழத்தில் உள்ளது. இச்சத்து இதயம், ரத்தம், நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.

12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!

ஆனால் ஒரு நாளில் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே பலரும் வாழைப்பழத்தை சாப்பிட பயன்படுகின்றனர். அதிலும் ஒரு நாளைக்கு 6 வாழைப்பழத்தை உட்கொள்ளலாம், 7 ஆவது பழத்தை உட்கொண்டால், உயிரை இழக்கக்கூடும் என்று நம்புகின்றனர். ஆனால் இது குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாளைக்கு 4,800 மிகி பொட்டாசியம்

ஒரு நாளைக்கு 4,800 மிகி பொட்டாசியம்

நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 4,800 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு வாழைப்பழத்திலோ வெறும் 400 மிகி தான் உள்ளது.

400 வாழைப்பழம்

400 வாழைப்பழம்

உயிரைக் குடிக்கும் அளவில் எனில் சுமார் 400 வாழைப்பழங்களை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும், அதில் உள்ள முழு பொட்டாசியமும் நேரடியாக சிறுநீரகங்களைத் தாக்கினால் மட்டுமே உயிரிழக்கக்கூடும்.

குடல் தடுக்கும்

குடல் தடுக்கும்

ஆனால், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, பாதி வழியிலேயே பாதி பொட்டாசியத்தை குடல் உறிஞ்சிவிடும். எஞ்சிய பொட்டாசியம் தான் சிறுநீரகங்களுக்குச் செல்லும். எனவே 400 பழங்களை ஒரே நேரத்தில் உட்கொண்டாலும் மரணம் ஏற்படப் போவதில்லை என்று லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த காத்தரின் கொலின்ஸ் என்னும் உணவுமுறை நிபுணர் கூறியுள்ளார்.

கதிரியக்க விஷம்

கதிரியக்க விஷம்

வாழைப்பழத்தைக் குறித்து மற்றொரு மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது. அது என்னவெனில், வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுகிறது என்பது தான்.

கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது...

கதிரியக்க விஷம் குறித்து கேத்தரின் கூறுவது...

ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கம் உள்ளது என்று கூறுவதோடு, வாழைப்பழத்தினால் கதிரியக்க விஷம் பரவுவதற்கு ஒருவர் ஒரு வேளைக்கு 10 லட்சம் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள்

ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள்

அதுமட்டுமின்றி, கேத்தரின் ஒரு நாளைக்கு 274 வாழைப்பழங்கள் வீதம் தொடர்ந்து ஏழு வருடங்கள் உட்கொண்டு வந்தால் தான், உடலில் கதிரியக்க விஷம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளே தென்படும் என்கிறார். எனவே, எவ்வித பயமும் இல்லாமல் ஒரு நாளைக்கு எவ்வளவு வாழைப்பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Many Bananas Would You Have To Eat To Kill You?

A theory has been doing the rounds for years that suggests too many bananas can kill you.
Story first published: Tuesday, September 15, 2015, 16:54 [IST]
Desktop Bottom Promotion