குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உடலில் செரிமான சீராக நடைபெறுவதில் குடல்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், செரிமானம் மீண்டலம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் உடலிலேலே குடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் இதன் வழியாகத் தான் உடலின் அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. கழிவுகள் வெளியேற்றப்பட்டால் தான் உடலால் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும்.

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் உணவுகள்!!!

எனவே அத்தகைய குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

நீங்கள் உண்ணும் உணவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அது செரிமானத்தின் போது எளிமையாக நகர்த்த உதவும். எனவே நார்ச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

சரியான நேரத்தில் உணவை உண்ணவும். சீரான இடைவெளியில் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொண்டு, குடல் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

புரோபயோடிக்ஸ் என்னும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை அதிகம் உட்கொள்ளுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்த்து, கொழுப்பு மற்றும் தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளுங்கள். இதனால் செரிமான மண்டலத்தினால் அந்த உணவுகளை தொந்தரவின்றி எளிதில் செரிக்க முடியும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

புகைப்பிடிப்பது மற்றும் காப்ஃபைன் நிறைந்த பானங்களைக் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை குடல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவை.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

முக்கியமாக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தமானது குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இதனால் செரிமானம் தங்கு தடையின்றி நன்கு நடைபெறும்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வாருங்கள். இதனால் குடலில் நச்சுக்கள் தங்குவதைத் தவிர்க்கலாம். மேலும் தண்ணீர் குடிப்பதால், உடலியக்கமும் சீராக இருக்கும்.

உங்களுக்கு வேறு ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Maintain Healthy Intestines

How to maintain healthy intestines? Well, healthy intestines are a result of good eating habits and workouts. Eat fibre and workout well.
Story first published: Saturday, September 5, 2015, 16:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter