மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் நுரையீரல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் அதிகம். அதுவும் சிகரெட் பிடிக்காமல், சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான தூசிகள் போன்றவற்றால் நுரையீரல் பிரச்சனைகளை கொண்டவர்கள் மத்தியில், 45 வருடங்களாக சிகரெட்டை பிடித்து, ஆரோக்கியமான நுரையீரல் செயல்பாட்டைக் கொண்டவர்களும் உள்ளனர். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

நுரையீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடிப்பது, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளால் தான் பலரும் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைகளைத் தவிர்த்து, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான நுரையீரலுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

அதிலும் உங்கள் நுரையீரலை மூன்றே நாட்களில் சுத்தம் செய்யும் வழிமுறையை தமிழ் போல்ட்ஸ்கை இங்கு கொடுத்துள்ளது. அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தமாக வைத்து, நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த வழிமுறையைப் பார்ப்போமா!!!

நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் பொருட்களைத் தவிர்க்கவும்

பால் பொருட்களைத் தவிர்க்கவும்

நுரையீரலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

நுரையீரலை சுத்தம் செய்யும் முந்தைய நாள் இரவு படுக்கும் முன் ஒரு கப் மூலிகை தேநீர் குடிக்க வேண்டும். இதனால் குடலில் இருந்து அனைத்து வகையான டாக்ஸின்களும் வெளியேறும். மேலும் நுரையீரலுக்கும் உடலுக்கும் போதிய ஓய்வு அளிக்க வேண்டும். அதற்கு இந்நாட்களில் அதிகப்படியான கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

நுரையீரலை சுத்தம் செய்யும் முதல் நாளன்று காலை உணவிற்கு முன் 2 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, 300 மிலி நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசி ஜூஸ்

1 மணிநேரம் கழித்து, அன்னாசி ஜூஸ் 300 மிலி குடிக்க வேண்டும். இந்த ஜூஸில் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் 300 மிலி சர்க்கரை சேர்க்காத கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். கேரட் ஜூஸானது இரத்தத்தை இந்த மூன்று நாட்களும் அமிலத் தன்மையில் இருந்து காரத்தன்மைக்கு மாற்றி பராமரிக்கும்.

பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ்

பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ்

மதிய உணவின் போது 400 மிலி பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் ஒன்றை குடிக்க வேண்டும். இது மிகவும் சிறப்பான நுரையீரலை சுத்தப்படுத்தும் டானிக் போன்று செயல்படும். பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களாவன பீட்ரூட், தக்காளி, அவகேடோ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ்

இரவு படுக்கும் முன் 400 மிலி கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும். இவை நுரையீரலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். கிரான் பெர்ரி கிடைக்காவிட்டால், சிவப்பு திராட்சை அல்லது ஆரஞ்சு ஜூஸை நீர் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மேற்கூறியவற்றை மூன்று நாட்கள் பின்பற்றும் போது, தவறாமல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அதிலும் வியர்வை நன்கு வெளியேறும் படி குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்

வெதுவெதுப்பான நீர் குளியல்

தினமும் 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரினால் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

ஆவி பிடிக்கவும்

ஆவி பிடிக்கவும்

கொதிக்கும் நீரில் 5-10 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, நீர் குளிரும் வரை ஆவி பிடிக்க வேண்டும். அப்படி ஆவி பிடிக்கும் போது, அந்நீராவியை சுவாசிக்க வேண்டும். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். மேலும் ஆவி பிடித்த பின் சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறியவற்றை மூன்று நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல், சைனஸ் போன்றவை விரைவில் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Clean Your Lungs Easily In Just Three Days

Many people have never tried a cigarette and still have problems with the lungs, while others smoke for 45 years, and even after that long period their lungs are still functioning well … it depends from person to person, and here we will tell you a few tips how you can purify the lungs within three days.
Subscribe Newsletter