துளசி இலைகளை க்ரீன் டீயில் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வீட்டிற்கு வெளியே கால் வைக்க முடியாத அளவில் மழைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இம்மழையால் பலரும் காய்ச்சல், சளி போன்றவற்றால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் இத்துடன் பனி அதிகம் இருப்பதால், சரியாக சுவாசிக்க முடியாமல் கூட பலரும் கஷ்டப்படுகிறோம்.

ப்ளாக் டீயின் சில வியப்பூட்டும் நன்மைகள்!!!

மழை பெய்தாலே நன்கு சூடாக எதையாவது குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றும். அந்நிலையில் பலரும் பால் டீயைத் தான் போட்டுக் குடிப்போம். ஆனால் அதைத் தவிர்த்து, க்ரீன் டீயில், துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், மழைக்கால நோய்களில் இருந்து விடுபடுவதோடு, உடல் எடையையும் குறைக்கலாம்.

பல்வேறு உடல் நல பயன்களைக் கொண்டுள்ள 10 வகையான சுவைமிக்க கிரீன் டீ!!!

சரி, இப்போது க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் க்ரீன் டீ போடும் போது, துளசி இலைகளைப் போட மறக்காதீர்கள். இல்லாவிட்டால் கடைகளில் விற்கப்படும் துளசி க்ரீன் டீயை வாங்கிக் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச பிரச்சனைகள் அகலும்

சுவாச பிரச்சனைகள் அகலும்

சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் க்ரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவை குணமாகும். மேலும் இந்த டீயைக் குடித்தால், சுவாசப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும்.

காய்ச்சல்

காய்ச்சல்

துளசி க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

துளசி க்ரீன் டீயில் என்ன முக்கியமான நன்மை நிறைந்துள்ளது? பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருக்கும். அதிலும் இதனை க்ரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் சீராகி, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகி, இதய பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பார்வை கோளாறுகள்

பார்வை கோளாறுகள்

துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோளாறுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி க்ரீன் டீயைக் குடித்தால், பார்வை கோளாறுகளை சரிசெய்யலாம்.

மன அழுத்தம் குறையும்

மன அழுத்தம் குறையும்

ஒரு கப் க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.

எடை குறையும்

எடை குறையும்

க்ரீன் டீ குடித்தால் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவே க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.

புற்றுநோய்

புற்றுநோய்

துளசி மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் தன்மை உள்ளதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக புற்றுநோயை குணமாக்க பெரிதும் உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Basil Green Tea Benefts Your Health

Read to know what are the benefits of basil greem tea anfd ways basil green tea can benefit your health.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter