உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் சில நாட்களாக மிகுந்த சோர்வை மற்றும் சோம்பேறித்தனத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலினுள் அழுக்குகள் அதிகம் சேர்ந்துள்ளது என்று அர்த்தம். எனவே நீங்கள் இயற்கையாக உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் உடலினுள் அழுக்குகள் சேர்கிறதோ, அதே உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் தான் அவற்றை வெளியேற்றவும் முடியும்.

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

உடலை சுத்தப்படுத்த எந்த உணவுகள் மற்றும் எந்த மாதிரியான பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். படிப்பது மட்டுமின்றி, அவற்றைப் பின்பற்றவும் செய்யுங்கள். சரி, இப்போது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவதற்கான சில வழிகளைக் காண்போம்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், பீட்ரூட், பசலைக்கீரை மற்றும் கேரட் போன்றவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் நார்ச்சத்து உடலை சுத்தம் செய்யும்.

தண்ணீர்

தண்ணீர்

எப்படி வீட்டில் உள்ள அழுக்குகளைப் போக்க தண்ணீர் பயன்படுகிறதோடு, அதேப் போல் மனித உடலினுள் சேர்ந்துள்ள அழுக்குகளைப் போக்கவும் தண்ணீர் உதவும். எனவே தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வாருங்கள். தண்ணீர் குடித்தாலே உடலினுள் அழுக்குகள் சேர்வதைத் தடுக்கலாம்.

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர்

தினமும் குளிக்கும் போது சிறிது நேரம் சூடான நீரில் குளித்து, பின் 2 நிமிடம் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி 3 முறை தினமும் பின்பற்றினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

பால் டீ குடித்தால், உடலில் நச்சுக்கள் அதிகரிக்கத் தான் செய்யும். ஆனால் தினமும் பால் டீக்கு பதிலாக க்ரீன் டீ குடித்தால், உடலினுள் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, மனித உடல் சுத்தமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

மனித உடலை சுத்தம் செய்ய வைட்டமின் சி அவசியம். எனவே வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உட்கொண்டு வாருங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் குறைந்தது 30-45 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இதனால் நன்கு வியர்த்து, உடலினுள் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

தியானம்

தியானம்

மூச்சு விடுவதில் கவனம் செலுத்தவும். அதற்கு தினமும் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி தியானம் மேற்கொள்ளும் போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

உங்களுக்கு இதுப்போன்று உடலை சுத்தப்படுத்த வேறு ஏதேனும் சிறந்த வழிகள் தோன்றினால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Flush Out Those Toxins This Way!

How to detox at home? Well, the process is pretty simple. Read on to know how to flush toxins.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter