For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிம்மதியான தூக்கம் வேண்டுமெனில் இரவில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

By Maha
|

தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், அதுவே பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டாலும் வரும். ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

ஏனெனில் தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். ஆனால் போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், அன்றாடம் தன்னைத் தானே சரிசெய்யும் நிகழ்வில் இடையூறு ஏற்படும். எனவே தினமும் குறைந்தது 7 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்!

ஆனால் நாம் உண்ணும் சில உணவுகளால் இரவில் தூக்கத்தின் தரம் குறைந்துவிடுவதோடு, உடல் எடை கூட அதிகரிக்கிறது. ஆகவே இரவில் நம் தூக்கத்தைக் கெடுக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாஸ்தா

பாஸ்தா

என்ன தான் பாஸ்தாவை வீட்டில் ஆரோக்கியமான முறையில் சமைத்தாலும், அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் பாஸ்தாவில் கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் ஏராளமாக உள்ளது. எனவே இதனை இரவில் உட்கொண்டு தூங்கினால், உங்களின் உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, உடல் பருமனடையக்கூடும். எனவே இதனை இரவில் உட்கொள்வதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் வேண்டுமானால் உட்கொள்ளுங்கள்.

பிட்சா

பிட்சா

தற்போது ஏராளமானோர் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து சமைக்க முடியவில்லை என்று, பிட்சா ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் பிட்சாவில் கலோரிகள் ஏராளமாக இருப்பதோடு, டயட்டில் உள்ளோருக்கு இது மிகவும் மோசமான ஓர் உணவுப் பொருளும் கூட. மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் வளமாக உள்ளதால், இதனை உட்கொண்ட பின்னர் உடலுழைப்பு இல்லாமல் அப்படியே உட்கார்ந்தாலே அதில் உள்ள கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கிவிடும். அப்படி இருக்க, இரவில் உட்கொண்டு தூங்கினால் என்ன ஆகும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஆய்வு ஒன்றில் ஐஸ் க்ரீம், சாக்லேட் கேக், குக்கீஸ் போன்றவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதால், அவற்றை இரவில் உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் ஐஸ் க்ரீம்களில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் ஏராளமாக இருப்பதால், இவற்றை உட்கொண்ட சில மணிநேரங்களிலேயே தூங்கினால், உடல் பருமன் அடைவதோடு, தூக்கமும் பாழாகும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

இரவில் மிகவும் காரமான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் கார உணவுகளில் உள்ள எண்ணற்ற கெமிக்கல்கள், உங்கள் இரைப்பையில் உள்ள அமிலங்களைத் தூண்டிவிட்டு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாதவாறு செய்துவிடும். எனவே காரமான உணவுகளை இரவில் தவிர்த்து, பகலில் உட்கொள்ளுங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

சாதம்

சாதம்

முக்கியமாக இரவில் சாதம் மற்றும் வெள்ளை பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றில் ஊட்டச்சத்துக்களின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் சாதம் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்க வழிவகை செய்து, எடையைக் குறைப்பதில் இடையூறு விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Things You Should Never Eat at Night

There are five things you should never eat at night. Read on to know more.
Desktop Bottom Promotion