உங்கள் கைகளைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் கைகள் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்த ஒரு செயலை செய்வதற்கும் கைகள் மிகவும் அவசியம். அத்தகைய கைகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் அது உண்மையே!

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

ஆய்வுகளில் கைகளைக் கொண்டே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக் கணிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மிகவும் ஆபத்தான நோய்களைக் கூட உங்கள் கைகளைக் கொண்டு கணிக்கலாம்.

உங்கள் நகங்களை வைத்து ஆரோக்கியத்தை கண்டறியும் முடியும் என்று உங்களுக்கு தெரியுமா!!!

உதாரணமாக, தைராய்டு பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், கல்லீரல் நோய்கள் போன்றவற்றை கைகளைப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.

சரி, இப்போது உங்கள் கைகள் சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள் பற்றி காண்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடர் சிவப்பு நிற கைகள்

அடர் சிவப்பு நிற கைகள்

உங்கள் கைகள் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால், உங்களுக்கு கல்லீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறியாகும். இல்லாவிட்டால், ஃபேட்டி கல்லீரல் அல்லது கல்லீரலில் இழைநார் வளர்ச்சி இருக்கலாம். ஆனால் கர்ப்பிணிகளுக்கு கைகள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது சாதாரணமானது மற்றும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம், கைகளில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பது தான்.

நீளமாக விரல்

நீளமாக விரல்

பெண்களுக்கு ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால், அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அர்த்தம். பொதுவாக ஆண்களுக்கு இந்த நிலையில் தான் இருக்கும். ஆகவே இது ஆண்களுக்கு பொருந்தாது.

வீக்கமடைந்த விரல்கள்

வீக்கமடைந்த விரல்கள்

உங்கள் விரல்கள் வீங்கி கொழுகொழுவென்று இருந்தால், ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். மேலும் தைராய்டு சுரப்பில் ஹார்மோன்களானது குறைவாக சுரக்கப்பட்டால், அது மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரித்து, உடலில் நீரை தேக்கி குண்டாக காண்பிக்கும்.

வெளிர் நகங்கள்

வெளிர் நகங்கள்

நடிகங்கள் வெளிரிய நிறத்தில் இருந்தாலோ மற்றும் விரலை அழுத்திய பின்பு ஒரு நிமிடத்திற்கு நகமானது வெள்ளையாக இருந்தாலோ, அது இரத்த சோகை இருப்பதற்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், தான் இத்தகைய நிலை ஏற்படும். இரத்த சோகைக்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், அது வளைந்து வளர ஆரம்பிக்கும்.

நகங்களுக்கு கீழே சிவப்பு நிற கோடு

நகங்களுக்கு கீழே சிவப்பு நிற கோடு

நகங்களுக்கு கீழே சிறிய சிவப்பு நிற கோடுகள் இருந்தால், அதற்கு ரத்தத்தில் தொற்றுகள் அல்லது இதய நோய் இருப்பதற்கான அறிகுறியாகும். வேண்டுமெனில், இதய வால்வுகளில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

விரல் நுனி தடித்தும், வட்ட வடிவிலும் இருப்பது

விரல் நுனி தடித்தும், வட்ட வடிவிலும் இருப்பது

விரல் நுனிகள் தடித்தும், வெளிப்புறமாக வளைந்தும் இருந்தால், அதற்கு நுரையீரல் அல்லது இதய நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே இம்மாதிரியான நகங்களை கொண்டவர்கள், மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

நீல நிற விரல் நுனிகள்

நீல நிற விரல் நுனிகள்

விரல் நுனிகள் நீலம் அல்லது கிரே நிறத்தில் உணர்வின்றி இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே உங்கள் கை விரல் நீல நிறத்தில் இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்.

கைகளுக்கு மேல் பகுதியில் ப்ரௌன் நிற புள்ளிகள்

கைகளுக்கு மேல் பகுதியில் ப்ரௌன் நிற புள்ளிகள்

கைகளுக்கு மேலே ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருந்தால், அது நீரிழிவு முற்றிய நிலையில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் பலவீனமடைந்து இருக்கும். இதனால் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால் கைகளின் மேல் ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts Your Hands Tell About Your Health

Signs that hands show about your health are difficult to believe. These signs shouldnt be ignored as they are important signs for our health care.
Subscribe Newsletter