For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்!!!

By Maha
|

அமைதியாக இருந்து ஆளைக் கொல்வது தான் கல்லீரல் நோய். ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏன் இரத்த பரிசோதனையின் மூலம் கூட கண்டறிய முடியாது. கல்லீரல் நோய் முற்றிய நிலையில் தான் அதனைக் கண்டுபிடிக்க முடியும். மேலும் உலக சுகாதார அமைப்பின் 2014 ஆம் ஆண்டின் மே மாத கணக்கீட்டின் படி, இந்தியாவில் சுமார் 216,865 மக்கள் கல்லீரல் நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

அதுமட்டுமின்றி ஒருவருக்கு கல்லீரல் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் கூட சாதாரணமாக நாம் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகவே இருக்கும். அவையாவன மிகுந்த சோர்வு, இரத்த சோகை, மஞ்சள் காமாலை அல்லது கால்களில் வீக்கம் போன்றவை.

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்!!!

ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு மது அருந்துவது, உடல் பருமன், நீரிழிவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. குறிப்பாக இப்பிரச்சனைகளால் இந்திய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இப்பிரச்சனைகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், கல்லீரல் நோயால் மரணத்தை சந்திப்பதைத் தடுக்கலாம்.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!!

சரி, இப்போது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுவிற்கு 'நோ' சொல்லுங்கள்

மதுவிற்கு 'நோ' சொல்லுங்கள்

மது அருந்துவதை நிறுத்தினால், கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதுவும் மதுவை அளவாக எப்போதாவது ஒருமுறை அருந்தினால் எப்பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக அடிக்கடி குடிக்கும் போது, கல்லீரல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆல்கஹாலை வெறும் வயிற்றில் எப்போதுமே குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்கவும்

உடல் பருமனைக் குறைக்கவும்

இந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். கல்லீரல் செயலிழந்து போவதற்கு உடல் பருமன் கூட ஒரு முக்கிய காரணமாகும். எனவே முதலில் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான மற்றும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, மிகுந்த கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான உடல் பருமனைத் தடுப்பதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், கல்லீரல் நொதிகளின் செயல்பாடு மேம்படும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீரை அதிகம் குடிப்பதால், கல்லீரலில் நச்சுமிக்க டாக்ஸின்கள் தங்குவதை அவ்வப்போது தடுக்கலாம். மேலும் உடலை சுத்தப்படுத்துவதில் தண்ணீர் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே அன்றாடம் 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

நீங்கள் தினமும் போதிய அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை எப்படி கண்டறிவது என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுள்ளீர்களா? இல்லையெனில் கவலையைவிடுங்கள். டாக்டர் ருபாலி தினமும் குறைந்த 5 பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். ஏனெனில் இதன் மூலம் அன்றாட உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்.

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ்

ஆய்வு ஒன்றில் கொழுப்புடன் கூடிய கல்லீரலுக்கும், ஒழுங்கற்ற குடல் செயல்பாட்டிற்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் குடல் செயல்பாட்டினை சீராக்குவதற்கு புரோபயோடிக்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். எனவே புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிரை அன்றாடம் உட்கொண்டு வந்தால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் அழிக்கப்பட்டு, குடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

வைட்டமின் சி மற்றும் பி

வைட்டமின் சி மற்றும் பி

வைட்டமின சியில் குணப்படுத்தும் தன்மை உள்ளதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதேப்போல் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்த உதவும்.

புரோட்டீன்

புரோட்டீன்

புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை மீண்டும் புதுப்பிக்க உதவும்.

நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள்

நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள்

எப்போதும் உங்களின் காலை உணவில் கொழுப்புக்கள் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு காலை வேளையில் தானியங்களை உட்கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Ways To Save Your Liver

According to WHO data published in May 2014, liver disease deaths in India reached 216,865 or 2.44% of total deaths. So here are some ways to save your liver. Take a look...
Story first published: Tuesday, September 22, 2015, 12:47 [IST]
Desktop Bottom Promotion