அளவாக பீர் குடித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லையாம்!

By: Babu
Subscribe to Boldsky

வார இறுதி வந்தாலே அனைவருக்கும் ஒரே சந்தோஷமாக இருக்கும். இதுவரை எப்போதும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்லுபலர்கள், வெள்ளிக்கிழமை வந்தால், காலையில் வேகமாக சென்று தங்கள் வேலையை செய்ய ஆரம்பிப்பார்கள். இதற்கு காரணம், மாலையில் வேகமாக சென்று நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குதூகலமாக இருக்கத் தான்.

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

நண்பர்களுடன் கொண்டாட்டம் எனும் போது அவ்விடத்தில் பீர் இல்லாமலா இருக்கும். நிச்சயம் இருக்கத் தான் செய்யும். ஆனால் பீரை அளவாக குடித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பீரைக் குடிப்பதை விட, நடுத்தர வயது மற்றும் முதுமை அடைந்தவர்கள் அளவாக குடிப்பது தான் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

சரி, இப்போது பீரைக் குடிப்பதால் எப்படி மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோயைத் தடுக்கும்

இதய நோயைத் தடுக்கும்

பீரை அளவாக குடித்து வந்தால், ஆண்களுக்கு 35 வயதிற்கு மேல் இதய நோய் வருவது தடுக்கப்படும். அதேப்போல் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் இதய நோய் வருவது தடுக்கப்படும் என்று 'பீர் மற்றும் ஊட்டச்சத்து' பற்றிய சர்வதேச மாநாட்டில் வெளிவந்துள்ளது.

நீரிழிவு தாக்கத்தைக் குறைக்கும்

நீரிழிவு தாக்கத்தைக் குறைக்கும்

அளவாக பீர் குடித்தால், நீரிழிவு வரும் தாக்கும் குறைவதாகவும், அதே நேரம் அளவுக்கு அதிகமாக குடித்தால், நீரிழிவின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் 'பீர் மற்றும் ஊட்டச்சத்து' பற்றிய சர்வதேச மாநாட்டில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

இறுதி மாதவிடாய் முடிந்த பெண்கள் பீரை அளவாக குடிப்பதன் மூலம், ஆஸ்டியோபோரோசிஸ் தாக்கும் வாய்ப்பு குறைவதாகவும் 'பீர் மற்றும் ஊட்டச்சத்து' பற்றிய சர்வதேச மாநாட்டில் சொல்லப்பட்டது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தத்தைக் குறைக்கும்

பீரைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, அதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். மேலும் மயோ கிளினிக்கின் படி, ஆல்கஹால் குடித்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக சொல்கிறது. அதிலும் அளவாக என்பது பெண்களுக்கு 12 அவுன்ஸ் மற்றும் ஆண்களுக்கு 24 அவுன்ஸ் ஆகும்.

பித்தக்கற்கள்

பித்தக்கற்கள்

பித்தக்கற்களானது கொலஸ்ட்ரால், பித்தநீர் மற்றும் இதர பொருட்களால் உருவாகி, அதனால் வயிற்றில் கடுமையான வலியை உண்டாக்குகிறது. ஆனால் மயோ கிளினிக்கின் படி, பீர் குடிப்பவர்களுக்கு பித்தக்கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைவதாக தெரியவந்துள்ளது.

சிலிகான் அதிகம்

சிலிகான் அதிகம்

பீரின் 33cl பாட்டிலில் 6.9 மி.கி சிலிகான் உள்ளது. இது ஒரு நாளைக்கு வேண்டிய சிலிகானின் அளவில் 22 சதவீதம் இதிலிருந்தே கிடைக்கிறது. மேலும் பீரில் உள்ள சிலிகான் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தி, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும்.

பீரின் முழு நன்மைகளைப் பெற...

பீரின் முழு நன்மைகளைப் பெற...

பீர் குடிப்பதால் அதன் முழு நன்மைகளைப் பெற வேண்டுமெனில், 1-3 யூனிட் பீரைக் குடித்து, நல்ல ஆரோக்கியமான வீட்டு உணவை உட்கொண்டு வர வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

பீரை கட்டாயம் குடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவாக எடுத்து வந்தால், அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். எனவே பீர் பிரியர்கள் பீரை அளவாக எடுத்து அதன் நன்மையைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drinking Beer Keeps A Doctor Away

Here are some remarkable and surprising beer benefits that might change your perception of the drink.
Story first published: Friday, June 12, 2015, 18:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter