நட்ஸ்களை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு அவற்றை ஊற வைத்து சாப்பிடுவதால், அவற்றின் சுவை அதிகம் இருப்பதோடு, எளிதில் செரிமானமாகும் என்பதால் தான். ஆனால் நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இன்னும் அதிகப்படியான உடல்நல நன்மைகள் கிடைக்கும்.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும். இதனை அப்படியே சாப்பிட்டால், அதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க அவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

அன்றாடம் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அதுமட்டுமின்றி வேறுசில காரணங்களும் நட்ஸ்களை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கு பின்னணியில் உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக நட்ஸ்களை மட்டுமின்றி தானியங்களையும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

தீபாவளி சிறப்புத் தொகுப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைட்டிக் அமிலம் நீங்கும்

பைட்டிக் அமிலம் நீங்கும்

நட்ஸ்களின் மேல்புறத் தோலில் பைட்டிக் அமிலம் இருக்கும். இந்த பைட்டிக் அமிலம் நட்ஸ்களுக்கு நல்லது, ஆனால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. பைட்டிக் அமிலம் மனித உடலினுள் அதிகம் சென்றால், அதனால் இரைப்பை பிரச்சனைகள் மற்றும் சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே நட்ஸ்களில் உள்ள பைட்டிக் அமிலத்தை நீக்க, ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது.

குடலியக்க பிரச்சனைகள்

குடலியக்க பிரச்சனைகள்

நட்ஸ்களின் மேல்புறத்தில் குடலியக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் நொதிகள் உள்ளன. குடலியக்கம் ஒருவருக்கு சீராக இல்லாவிட்டால், இதனால் சௌகரியமாக இருப்பதோடு, எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. முக்கியமாக வாய்வு தொல்லை ஏற்படும். எனவே இதனைத் தவிர்க்க ஊற வைத்து சாப்பிடுங்கள்.

டானின்கள் வெளியேற்றப்படும்

டானின்கள் வெளியேற்றப்படும்

நிறைய மக்களுக்கு டானின்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த டானின் ப்ளாக் டீயில் அதிகம் உள்ளது. ஒருவரின் உடலில் டானின்களின் அளவு அதிகமானால், செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே நட்ஸ்களில் உள்ள டானின்களை நீக்க, ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது.

குடல் ஆரோக்கியம் மேம்படும்

குடல் ஆரோக்கியம் மேம்படும்

நட்ஸ்களை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். மேலும் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடலால் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும்.

ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும்

ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும்

உடலால் உணவில் உள்ள சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். பைட்டிக் அமிலம் தான் சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தடையை ஏற்படுத்தும். இதனால் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் மக்னீசியம் குறைபாடு ஏற்படும். அதுவே ஊற வைத்து சாப்பிட்டால், இப்பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

விதைகளிலும் பைட்டிக் அமிலம்

விதைகளிலும் பைட்டிக் அமிலம்

நட்ஸ்களில் மட்டுமின்றி விதைகளிலும் பைட்டிக் அமிலம் ஏராளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக எள், பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை போன்றவற்றில் இது அதிகமாக உள்ளது. எனவே இவைகளை உட்கொள்ளும் முன்பும், ஊற வைத்து சாப்பிடுங்கள்.

தானியங்களையும் ஊற வைக்கவும்

தானியங்களையும் ஊற வைக்கவும்

தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் கோதுமையில் பைட்டிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இவைகளைப் பயன்படுத்தும் முன், நீரில் மறக்காமல் ஊற வைத்து கழுவி பின் சாப்பிடுங்கள். குறிப்பாக இவைகளை ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த நீரில் ஊற வைத்தால், விரைவில் அதில் உள்ள நச்சுமிக்க கெமிக்கலை நீக்கலாம்.

எப்படி ஊற வைப்பது?

எப்படி ஊற வைப்பது?

நட்ஸ், தானியங்கள் மற்றும் விதைகளை சாப்பிடும் முன், ஒரு பெரிய பௌலில் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 6 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Soaking Nuts & Seeds Before Eating

Nuts should be soaked before eating as it has many health benefits. Soaking removes phytic acid and tannins from nuts.
Story first published: Friday, November 6, 2015, 14:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter