For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சளி, இருமல் அல்லது வேறு ஏதேனும் சுவாச பிரச்சனை இருந்தால் பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடிப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் இது நல்ல நிவாரணம் வழங்கும். இதற்கு காரணம் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான். பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அதுமட்டுமின்றி, மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது. அதேப்போல் பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பானத்தைக் குடித்தால் பலன் கிடைக்காமலா போகும். ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

சரி, இப்போது தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி, இருமல்

சளி, இருமல்

சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.

இரத்தம் சுத்தமாகும்

இரத்தம் சுத்தமாகும்

உங்கள் உடலில் உள்ள இரத்தத்தை தினமும் சுத்தம் செய்ய நினைத்தால், பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள். இதனால் மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.

எலும்புகளை வலிமைப்படுத்தும்

எலும்புகளை வலிமைப்படுத்தும்

பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமெனில் இன்று முயற்சித்துப் பாருங்கள்.

தலைவலி நீங்கும்

தலைவலி நீங்கும்

மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் கால வயிற்று வலி

மாதவிடாய் கால வயிற்று வலி

பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.

எடை குறையும்

எடை குறையும்

மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

சரும அழகு அதிகரிக்கும்

சரும அழகு அதிகரிக்கும்

முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Warm Milk With Turmeric

Instead of putting a bunch of unhealthy ingredients like chocolate powder, sugar and cream in your milk, start drinking haldi doodh instead. An age-old remedy, it is a powerful combination that has several health benefits.
Desktop Bottom Promotion