சங்கின் ஆயுர்வேத பயன்பாடு பற்றி தெரியுமா?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

சங்கு என்பது ஆயுர்வேதத்தில் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதேப்போல் இந்து மற்றும் புத்த மதங்களிலும் கூட சங்கு என்பது முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்மறையான ஆற்றல் திறன் மற்றும் தீய சக்திகளை விரட்டுவதற்கு ஒரு இசைக்கருவியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!!

சங்கில் இருந்து செய்யப்பட்ட பொடி இந்திய ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; குறிப்பாக வயிற்று வலிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அழகு மற்றும் வலிமையை அதிகரிக்கவும் ஆயுர்வேதத்தில் சங்கு பயன்படுத்தப்படுகிறது.

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

சரி, இப்போது சங்கின் ஆயுர்வேத பயன்பாடுகளைப் பற்றிப் பார்க்கலாமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும நோய்கள் நீங்கும்

சரும நோய்கள் நீங்கும்

சங்கில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை இந்த நீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ் செய்யவும். சொறி, சிரங்கு, அலர்ஜிகள் போன்ற பல சரும நோய்களை இது குணப்படுத்தும். இந்த செயல்முறையை ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் காணப்படும் வெள்ளை புள்ளிகளும் நீங்கும்.

கருமையான முடி

கருமையான முடி

சொன்னால் நம்பமாட்டீர்கள், மேற்கூறியதை போல் சங்கில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை அதில் பன்னீரை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தலை முடியை இந்த கலவையை கொண்டு கழுவவும். சில நாட்களில் உங்கள் தலை முடியின் அசல் நிறத்தை மீண்டும் பெறுவீர்கள். புருவங்கள், மீசை மற்றும் தாடியிலும் கூட இதனை பயன்படுத்தலாம். முடிகள் எல்லாம் மென்மையாக மாறும்.

வயிற்றுப் பிரச்சனைகள்

வயிற்றுப் பிரச்சனைகள்

வயிற்று வலி, செரிமானமின்மை, குடல்களில் புண் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், இரவில் சங்கில் ஊற வைத்த தண்ணீரை இரண்டு டீஸ்பூன் குடியுங்கள்.

கண் பார்வை அதிகரிக்கும்

கண் பார்வை அதிகரிக்கும்

முந்தைய நாள் இரவு சங்கில் ஊற வைத்த தண்ணீரின் அளவிலேயே சாதாரண தண்ணீரையும் அதனுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு கண்களை கழுவினால் உங்கள் கண்பார்வை அதிகரிக்கும்.

சுருக்கங்கள் மறையும்

சுருக்கங்கள் மறையும்

குளித்த பிறகு முகம் மற்றும் கழுத்தில் சங்கை கொண்டு தேய்த்தால், சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் குறையும். இயற்கையான முறையில் சருமமும் பொலிவை பெறும்.

கருவளையங்கள் நீங்கும்

கருவளையங்கள் நீங்கும்

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்க, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக 5 நிமிடங்களுக்கு சங்கை கொண்டு மென்மையாக தேய்க்கவும்.

கண் பிரச்சனைகள் குணமாகும்

கண் பிரச்சனைகள் குணமாகும்

சங்கில் ஊற வைத்த தண்ணீரை உங்கள் உள்ளங்கையில் ஊற்றி, கண்களை திறந்த நிலையில் அந்த தண்ணீரின் மீது வைக்கவும். சில நொடிகளுக்கு கண்விழியை இடதிலிருந்து வலது நோக்கி வேகமாக நகர்த்தவும். வறண்ட கண்கள், கண்களின் சீழ் மற்றும் பல்வேறு கண் பிரச்சனைகளை இது போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Usage of Shankha (Conch / Sea Shell)

Sankh (Conch or Sea Shell) has great importance in Ayurveda. A powder made from the shell material is used in Indian Ayurvedic medicine, primarily as a cure for stomach ailments and for increasing beauty and strength.
Story first published: Friday, June 26, 2015, 8:32 [IST]