உச்சி முதல் பாதம் வரையுள்ள நோய்களை குணப்படுத்தும் அரும்பெரும் மருந்து வில்வம்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம். தெய்வீக மரமாக கருதப்படும் வில்வ மரம், எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டு இருந்தால் அதை மகாவில்வம் என்பார்கள்.

தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!

நமது முன்னோர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் மருத்துவத்தையும், அறிவியலையும் பிணைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். காலப்போக்கில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. காலம் மருவிய பின்பு மனிதனின் இடை சொருகல்களில் பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், மருத்துவம் சார்ந்த விஷயங்களும் கண்மூடித்தனமான காரியங்களாக மாறிவிட்டது.

உயிரை பறிக்கும் நோய்களை கூட விரட்டியடிக்குமாம் ஸ்டெம்செல்!!!

இந்த வகையில் இப்போது வில்வத்தை சிவனுக்கு அணிவிக்கும் மாலையாகவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருளாகவும் மட்டுமே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர் அதில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மகரந்தத் தூள்கள் கொண்டது வில்வம் என கூறப்படுகிறது. வில்வமர நிழல், காற்று இவற்றிலும் கூட மருத்துவ சக்தி இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்து நீர் பிரச்சனை சரியாகும்

விந்து நீர் பிரச்சனை சரியாகும்

வில்வப் பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். மற்றும் வில்வ பூ மந்தத் தன்மையை போக்கும்.

கண் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்

கண் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒத்தடம் வைத்தால் கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

காச நோய் கட்டுப்படுத்தும்

காச நோய் கட்டுப்படுத்தும்

வில்வத்தின் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று நோய்களை கட்டுப்படுத்தும்

வில்வப்பூ

வில்வப்பூ

வில்வ பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

வில்வப்பழம்

வில்வப்பழம்

வில்வ பழம் விஷ நோய்களைத் தடுக்க உதவும். நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் அதிகரிக்கும்.

பித்தம் சரியாகும்

பித்தம் சரியாகும்

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயை குணமாக்கும்.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

கரும்புள்ளிகள்

கரும்புள்ளிகள்

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் கலந்து அரைத்து இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் கழுவி வந்தால். ஒரு மாதத்தில் நிறம் மாறி கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

வயிற்று வலி

வயிற்று வலி

ஒரு பிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் அதிகரிக்கும்.

சோகை குணமாகும்

சோகை குணமாகும்

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகை நோய் குணமாகும்.

மூல நோய் குணமாகும்

மூல நோய் குணமாகும்

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரில் கலந்து குடித்தால் மூல நோய் நாளடைவில் குணமாகும் என கூறப்படுகிறது.

வில்வம்

வில்வம்

சோகை, மேக நோய், பசியின்மை, கை - கால் பிடிப்பு, சளி, இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Vilvam

Do you know about the amazing health benefits of vilvam? read here.
Story first published: Friday, March 20, 2015, 10:26 [IST]
Subscribe Newsletter