செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வாழைப்பழத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் விலை மலிவாக கிடைக்கக்கூடியது தான் மஞ்சள் நிற வாழைப்பழங்கள். எனவே பலரும் மஞ்சள் நிற வாழைப்பழங்களைத் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் மஞ்சள் நிற வாழைப்பழங்களை விட, செவ்வாழை மிகவும் ருசியாகவும் இருக்கும். மேலும் செவ்வாழையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல் செவ்வாழையின் விலை அதிகம்.

இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆகவே செவ்வாழை விலை அதிகம் இருந்தால், அவ்வப்போது அதனை வாங்கி சாப்பிடுங்கள். இங்கு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, செவ்வாழையைப் பார்க்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டால், செவ்வாழை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் ஒரு செவ்வாழையில் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாய்வு தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவைகள் வராமல் தடுக்கலாம்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

செவ்வாழையில், உடலின் செயல்பாட்டிற்கு தேவையான பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் தான் சிறுநுரீக கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

செவ்வாழை எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும். அதனால் தான் குழந்தைகள், வயதானவர்கள் செவ்வாழை தினமும் ஒன்று சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

மற்ற பழங்களை விட செவ்வாழையில் கலோரிகள் குறைவு. ஆகவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்ட கண்டதை சாப்பிட தோன்றாது மற்றும் வயிறு விரைவில் நிறைந்துவிடும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுன் இருக்கும். மேலும் இதனை உட்கொண்டால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

இரத்த அளவை அதிகரிக்கும்

இரத்த அளவை அதிகரிக்கும்

செவ்வாழையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் மற்றும் உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 2-3 செவ்வாழையை உட்கொண்டு வந்தால், இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

செவ்வாழையில் ஆன்டாசிட் தன்மை உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் இதனை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

பைல்ஸ்

பைல்ஸ்

அதிகப்படியான உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் முறையற்ற குடலியக்கம் போன்றவற்றால் ஏற்படும் பைல்ஸ் பிரச்சனையால் கோடை காலத்தில் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இதனை தவிர்க்க தினமும் ஒரு செவ்வாழையை உடகொண்டு வாருங்கள். இதனால் கோடையில் பைல்ஸ் முற்றுவதைத் தடுக்கலாம்.

மன அழுத்த நிவாரணி

மன அழுத்த நிவாரணி

செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் நீங்கும். ஆயுவ் ஒன்றில் தினமும் இரண்டு செவ்வாழையை உட்கொண்டு வந்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, நேர்மறையான எண்ணத்தை அதிகரிதது, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும் என்று தெரிய வந்துள்ளது.

அல்சர்

அல்சர்

அல்சர் இருப்பவர்கள், செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், அசிடிட்டியின் அளவு குறைந்து, வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது தணிக்கப்படும். மேலும் செவ்வாழை இரைப்பையில் உள்ள செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

பார்வை குறைபாடு

பார்வை குறைபாடு

செவ்வாழையை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ பார்வை கோளாற்றை சரிசெய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Red Banana

Here are some amazing health benefits of red banana. Take a look...
Story first published: Saturday, April 4, 2015, 13:10 [IST]
Subscribe Newsletter