உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தும் 7 யோகா நிலைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. யோகாவால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது இப்போது பலருக்கும் தெரிந்துள்ளது. இந்தியா மட்டும் இல்லாமால் வெளிநாடுகளில் கூட தற்போது இந்த கலையை மிகவும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவும் இந்த கலை. அதோடு நின்று விடாமல் மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியை கொடுக்கும்; போதிய தூக்கத்தைத் தரும்; சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், ஏன் யோகாவை சீரான முறையில், தொடர்ச்சியாக செய்து வரும் சிலர் சந்தோஷமாகவும் மன நிம்மதியுடனும் இருக்கிறார்கள் என்று. அதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. ஆம், அது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையின் தரத்தில் பெரிய ஊக்குவிக்கியாக விளங்கும். அதிகரித்த உள்ளுறுதி முதல், தன்னம்பிக்கையில் சிறப்பான நெகிழுந்தன்மை மற்றும் உயர்ந்த உடல் உணர் திறன் வரை, யோகாவுக்கும் சிறந்த செக்ஸ் வாழ்க்கைக்கும் நேரடி தொடர்பு இருப்பது தெள்ளத் தெளிவாக தெரியும். யோகா என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் படுக்கையறையில் பயன்களை அளிக்கும். படுக்கையில் அதிக சூட்டை எதிர்ப்பார்க்கும் உங்க வாழ்க்கை துணையின் தேவையை பூர்த்தி செய்ய யோகா உதவும்.

அனைத்து யோகா நிலைகளிலும் பயன்கள் உள்ளது என்றாலும், செக்ஸ் செயல்முறைகள் மேம்பட யோகா பயிற்சியாளர்கள் முதன்மையான 7 யோகா நிலைகளை பரிந்துரைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அகலமாக கால்களை விரித்து உட்காரும் நிலை

அகலமாக கால்களை விரித்து உட்காரும் நிலை

இந்த நிலை கவட்டை பகுதிகளில் இரத்த ஓட்டத்தை நன்றாக அனுப்பச் செய்யும். மடங்கிய கால்களுடன் உட்கார்ந்திருக்கும் நிலையில், முடிந்த வரை கால்களை அகலமாக விரித்துக் கொள்ளுங்கள். கால்களை தரையில் அழுத்துவதால் தொடை தசைகளை ஈடுபடுத்துங்கள். ஒன்று நேரான நிலையில் அமரலாம் அல்லது ஆழமான உடற்பயிற்சிக்கு உங்கள் நெஞ்சை தரையை கீழ்நோக்கிய வண்ணம் உட்காரலாம்.

விபரிட்ட காரணி நிலை

விபரிட்ட காரணி நிலை

இந்த நிலை இடுப்பு பகுதியின் இரத்த ஓட்டத்தில் கவனம் செலுத்தும். தரையில் மல்லாக்க படுத்து, கால்களை காற்றில் தாங்கியபடி, உங்கள் உடலுக்கு செங்குத்தாக நீட்டுங்கள். கால்களுக்கு ஆதரவு வேண்டுமானால் சுவற்றையும் பயன்படுத்தலாம். இதனால் கால்களை நீட்டமாக வைக்க அது உதவியாக இருக்கும்.

குழந்தையின் இருக்கை நிலை

குழந்தையின் இருக்கை நிலை

இந்த நிலை மனம், உடல் என இரண்டையுமே அமைதியுற செய்யும். மேலும் அன்றைய நாளின் மன அழுத்தத்தை போக்கவும் உதவும். இதனால் உங்கள் வாழ்க்கை துணையின் மீது சிறப்பாக கவனத்தை செலுத்த முடியும். முட்டி போடும் நிலையில், உங்கள் குதிங்கால்களின் மீது அமரவும். பின் முதுகை மெதுவாக வளைக்கவும். கைகளை உங்கள் முன் நீட்டி தரையில் வைக்கவும். அல்லது உங்கள் பாதங்கள் அருகில் கைகளை கொண்டு வரவும்.

பாலம் நிலை

பாலம் நிலை

இடுப்புக்கு கீழ் இருக்கும் தசைகளின் மீது கவனம் செலுத்தும் இந்த பாலம் நிலை. இதனால் திடமான மற்றும் கட்டுப்பாடான புணர்ச்சி பரவச நிலை ஏற்படும். பால நிலையை செய்ய வேண்டுமானால், முதுகை பக்கத்தை தரையில் வைத்து மல்லாந்து படுக்கவும். வளைந்த முட்டிகளுடன், உங்கள் தொடை தரைக்கு இணையொத்து இருக்கும் நிலையில், இடுப்புக்கு கீழான உங்கள் பின் புரத்தை மெதுவாக உயர்த்தவும் இது பாலத்தை போன்ற நிலையை ஏற்படுத்தும். இந்த நிலையில் 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை அப்படியே இருங்கள்.

தாமரை நிலை

தாமரை நிலை

தாமரை நிலை என்பது உங்கள் இடுப்பு மற்றும் தொடை தசைகளின் நெகிழுந்தன்மையை மேம்படுத்த உதவும். இவைகள் தான் பலவித செக்ஸ் இருக்கை நிலைகளுக்கு மையமாக விளங்குகிறது. தாமரை இருக்கை நிலைக்கு, கால்களை மடித்து தரையில் உட்காரவும். பின் ஒவ்வொரு பாதத்தையும் கைகளால் இழுத்து, எதிர்புற தொடைக்கு மேலாக வைக்கவும். இந்த நிலையில் இருக்கும் போது, தொடை தசையில் ஆழமான நெகிழுந்தன்மையை உங்களால் உணர முடியும்.

கலப்பை நிலை

கலப்பை நிலை

கலப்பை நிலை மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் உஷார்நிலையும் கிளர்ச்சியூட்டுதலும் மேம்படும். இது உங்கள் முதுகிற்கும் நெகிழுந்தன்மையை ஏற்படுத்தும். இதனால் உடலுறவில் ஈடுபடும் போது காயம் ஏற்படுவது தடுக்கப்படும். தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். பின் நீட்டிய கால்களை உங்கள் உடலுக்கு மேல் காற்றில் மெதுவாக கொண்டு வரவும். உங்கள் கால் விரல்கள் உங்கள் தலைக்கு பின் வந்து தரையை தொடும் வரை கால்களை கொண்டு வாருங்கள். உங்கள் கைகளை உங்களின் பின் பக்கம் வைத்து தரையோடு சேர்த்து முட்டுக் கொடுத்து, தள்ளி விட்டால் இதனை சுலபமாக செய்யலாம்.

கழுகு நிலை

கழுகு நிலை

கழுகு நிலை என்பது பார்ப்பதற்கு மயக்கும் வண்ணம் உள்ள ஒரு நிலையாகும். இது கர்ப்பப்பை வாய் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதனால் உடலுறவில் ஈடுபடும் போது அதிக சுகத்தை அளிக்கும். ஒரு காலில் நின்று, மற்றொரு காலை தரையில் ஊன்றியுள்ள காலோடு பிணைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் மெதுவாக அழுத்தும் கொடுத்தால், இந்த நிலையை விட்டு இயல்பு நிலைக்கு வரும் போது, அங்கே இரத்த ஓட்டம் சீறி பாயும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Yoga Poses That Improve Your Love Life

Though all yoga positions have their benefits, yoga instructors recommend these as the top 7 positions for improved love life. 
Subscribe Newsletter