எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் 12 ஆரோக்கிய பயன்கள்!!!

By: Viswa
Subscribe to Boldsky

எலுமிச்சையில் இயற்கையிலேயே நிறைய ஆரோக்கிய பயன்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் மற்றும் மலிவான விலையில் கிடைக்கும் பழம், எலுமிச்சை ஆகும். இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. எலுமிச்சையில் சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்து அதன் மூலம் அழகை மேம்படுத்தும் தன்மை உள்ளது. எலுமிச்சை ஜூஸில் உள்ள சிறந்த பயன் எதுவெனில் உடல் எடை குறைக்க இது வெகுவாக பயனளிக்கிறது. இதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கவும் எலுமிச்சை உதவுகிறது.

காலை வேலையில் எலுமிச்சை ஜூஸ் பருகுவது மிக அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாகும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சையில் இருக்கும் நச்சு கிருமிகளை அழிக்கும் பயன் உங்களை வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரண தொல்லைகளில் இருந்து விடுபட செய்கிறது. மேலும் பெருங்குடல் சார்ந்த கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது எலுமிச்சை. எலுமிச்சை ஜூஸின் மூலம் நாம் அடையும் பலன்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான தீர்வு

செரிமான தீர்வு

தினமும் காலையில் தவறாது எலுமிச்சை ஜூஸ் பருகினால் செரிமான கோளாறு குணமடையும். எலுமிச்சையில் இருக்கும் நற்குணங்கள் செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சையில் இருக்கும் மிகுதியான உயர்ரக வைட்டமின் சி-யின் பயன் மூலம் நமது உடலிற்கு தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

வாய் பராமரிப்பு

வாய் பராமரிப்பு

பற்களில் ஏற்படும் வலியை குறைக்கும் பயன் எலுமிச்சையில் உள்ளது. மேலும் இது, ஈறு மற்றும் எனாமலை வலுவடைய உதவுகிறது.

தொண்டைப் பிரச்சனைகள்

தொண்டைப் பிரச்சனைகள்

எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

எலுமிச்சை நீரின் சிறந்த பயன்களில் ஒன்று, அதை தினசரி தேனில் கலந்து பருகி வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்க இயலும்.

இரத்தக்கொதிப்பு

இரத்தக்கொதிப்பு

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை ஜூஸ் நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

காய்ச்சல்

காய்ச்சல்

எலுமிச்சை ஜூஸ் பருகுவதன் மூலம் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடையலாம்.

வளர்ச்சிதையை தூண்டுகிறது

வளர்ச்சிதையை தூண்டுகிறது

எலுமிச்சை நீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் போதையில் இருந்து தெளியவும், வளர்ச்சிதையை தூண்டவும் கூட எலுமிச்சை ஜூஸ் உதவுகிறது.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

எலுமிச்சையின் நற்குணங்கள் மற்றும் வைட்டமின் சி-யின் பயன் மூலம் சரும பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வைப் பெற இயலும். முக்கியமாக முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்க வெகுவாக உதவுகிறது எலுமிச்சை ஜூஸ்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

இது நம் உடலில் இருக்கும் கால்சியம் மற்றும் ஆக்சிஜனின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் போது எலுமிச்சை ஜூஸை உட்கொள்ளும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.

மூட்டு வலி

மூட்டு வலி

இதமான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்து வர மூட்டு வலியில் இருந்து எளிதாக விடுப்பெறலாம்.

கல்லீரல்

கல்லீரல்

எலுமிச்சை ஜூஸ் கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

12 Health Benefits Of Drinking Lime Water

What are the benefits of lime water? There are many health benefits of lime water.
Story first published: Thursday, February 5, 2015, 9:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter