தயிர் சாப்பிட்டும் உடம்பு வெயிட் போடாமல் இருப்பது எப்படி?

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

தயிரில் உள்ள கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு நிறைய நன்மைகளை செய்கின்றன. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் தயிர் உதவுகிறது. கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டாலே போதும் நம் வயிறு 'கம்'மென்று அமைதியாகி விடும்.

தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு அசவுகரியமான விஷயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது. எவ்வளவு, எப்படி தயிர் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கு வெயிட் போடும்.

சில தயிர் தவறுகள் காரணமாக உடல் எடை குறைவதற்குப் பதிலாக கலோரிகள் அதிகரித்துவிடும். அதுப்போன்ற சில தவறுகளைத் தவிர்த்து உடல் எடை குறைவதற்கான சில வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வளவு கலோரி

எவ்வளவு கலோரி

தயிர் சாப்பிடும் விஷயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். சில தயிர் பாக்கெட்டுகளில் 100 கலோரிகளும், 6 கிராம் புரதமும் இருக்கும். அதற்குப் பதில் அதிக கலோரிகள் இருந்தாலும், 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரைப் பயன்படுத்துதல் நல்லது.

எவ்வளவு உணவு

எவ்வளவு உணவு

சிலர் பெரிய பாத்திரத்திலிருந்து சாதத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு தயிர் சாதம் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவது சாதாரணமாகவே தோன்றினாலும், உண்மையில் அவர்கள் நிறைய சாப்பிட்டிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடம்பு எடை போடும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே அளவோடு தயிர் சாதம் சாப்பிடுதல் நல்லது.

எவ்வளவு எக்ஸ்ட்ரா

எவ்வளவு எக்ஸ்ட்ரா

தயிர் சாப்பிடும் போது தேன், தானியம், நட்ஸ், பழங்கள் போன்ற வேறு உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது சிலருக்கு வழக்கம். அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு அல்லது மிகவும் குறைத்து விட்டு, தயிருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். காலை உணவாக இருந்தால் மட்டும், சிறிது நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.

எவ்வளவு கொழுப்பு

எவ்வளவு கொழுப்பு

நீங்கள் வாங்கப் போகும் தயிர் பாக்கெட்டுகளில் 18 கிராமுக்கு அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தாலோ அல்லது தயிர் பாக்கெட் லேபிளில் சர்க்கரை முதலாவது இடத்தில் இருந்தாலோ அதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் கொழுப்பை அதிகமாக்குகிறது. பதிலாக, புரதம் அதிகமாக இருக்கும் தயிர் பாக்கெட்டுகளை நீங்கள் நாடலாம்.

எவ்வளவு ப்ரோபயோட்டிக்

எவ்வளவு ப்ரோபயோட்டிக்

ப்ரோபயோட்டிக் அதிகம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள தயிர் பாக்கெட்டுகளை நம்பி வாங்கி விடாதீர்கள். இதில் சில தகிடு தத்தங்கள் நடப்பதாகத் தெரிகிறது. அது குறித்து நன்றாக விசாரித்து தயிர் பாக்கெட்டைத் தேர்ந்தெடுங்கள் அல்லது அளவோடு அந்தத் தயிரை சாப்பிடுங்கள்.

வீட்டுத் தயிரே சிறந்தது

வீட்டுத் தயிரே சிறந்தது

கடைகளில் விற்கப்படும் தயிரை வாங்கும் போது தான் அதில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு கலோரி, எவ்வளவு சர்க்கரை என்று பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் தயிரில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. பக்கத்து வீட்டில் உரைத் தயிர் வாங்கி, அதை நீங்கள் காய்ச்சிய பாலில் தேவையான அளவு எடுத்து உரை ஊற்றிப் பாருங்கள். அந்த வீட்டுத் தயிரில் உள்ள சுவையே தனி; கொழுப்பும் குறைவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Yogurt Mistakes That Make You Fat

Here's how to enjoy your daily dose of dahi in the healthiest way possible way. Here are the habits to avoid, so you can reap its full health benefits.
Story first published: Sunday, November 23, 2014, 9:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter