For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையான வழிகளில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில டிப்ஸ்...

By Ashok CR
|

ஒவ்வொரு வருடமும், புகைப்பிடிப்பதால் உண்டாகும் நோய்களால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரை விடுகின்றனர். புகைப்பிடிப்பதால் நோய்கள் உண்டாகும். இது கொஞ்சம் கொஞ்சமாக சாவதற்கான வழி. புகைப்பிடிப்பதால் நம் உடலில் ஏற்படும் தாக்கங்களால், நாம் வருடக்கணக்கில் பாதிப்புக்குள்ளாகிறோம். புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் தான் நுரையீரல் புற்றுநோயால் 10 மடங்கு அதிகமாக பாதிக்கப்படலாம். நான்கில் மூன்று இளைஞர்கள் சாவது புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதய நோய்களினாலே.

சில வீட்டு சிகிச்சைகள் மூலமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், உங்கள் வாழ்க்கையின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். நெஞ்சு வலி, வாதம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்கள் போன்றவற்றால் அவதிப்படும் வாய்ப்புகளும் குறையும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது என்பது சுலபம் இல்லை தான். அதற்காக கவுன்செலிங் கொடுக்கும் மையங்கள் பல உள்ளது. இந்த பழக்கத்தை மறக்க வைப்பதற்கு பல சிகிச்சைகளும் இருக்கிறது. ஆனால், சுலபமாக கையாளக்கூடிய வீட்டு சிகிச்சைகளாலும் கூட இந்த பழக்கத்தை கைவிடலாம். எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெல்ல குறைத்தல்

மெல்ல குறைத்தல்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது என்றால் உடனே நிறுத்துவது என்று அர்த்தம் கிடையாது. மாறாக அதனை மெல்ல குறைத்து கொண்டே வர வேண்டும் - உதாரணத்திற்கு ஒரு நாளைக்கு 10 சிகரெட் என்று இருந்த கணக்கை, இனி 7 அல்லது அதற்கு குறைவாக மாற்றலாம். அப்படி இல்லையென்றால் உணவருந்திய பிறகோ அல்லது சிகரெட் அடிக்க வேண்டும் என தோன்றும் போதோ, அதனை சற்று தள்ளிப் போடுங்கள். ஆனால் ஒன்றை தீர்மானிப்பது மிகவும் முக்கியம்; இந்த பழக்கத்தை கை விடுவது என முடிவெடுத்த நாளில் இருந்து 2 வார காலத்திற்குள் முழுவதுமாக இந்த பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும்.

புகை வாசனையை விட்டு விலகியே இருங்கள்

புகை வாசனையை விட்டு விலகியே இருங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் சிகரெட்டை பார்ப்பது, அதன் சுவையை ருசிப்பது மற்றும் அதன் வாசனையை நுகர்ந்து பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். புகையின் வாசத்தை உங்கள் சுற்று வட்டாரத்தில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீக்குவது என்பது கஷ்டமான ஒன்றாகும். அதனால் அந்த வாசனையை முழுமையாக நீக்க சிறந்த வழிகளை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஃபர்னிச்சர்களில் இருந்து இந்த வாசனையை நீக்குவதற்கு பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்கள். அதனை சோஃபா மற்றும் நாற்காலிகளில் சற்று தெளித்து விட்டாலே போதும். சில மணி நேரங்களுக்கு அவைகளை அப்படியே விட்டு விட்டு, பின் தூசி தட்டிக் கொள்ளுங்கள்.

வாய்க்கு வேலை கொடுத்து கொண்டே இருங்கள்

வாய்க்கு வேலை கொடுத்து கொண்டே இருங்கள்

புகைப்பிடிக்கும் ஆசை ஏற்பட்டால், உடனே சர்க்கரையில்லாத சூவிங் கம்மை போட்டு கவனத்தை திசை திருப்புங்கள். லாலி பாப், அதிமதுரம், ஸ்ட்ரா அல்லது பல் குச்சியை கொண்டு வாய்க்கு ஏதாவது வேலை கொடுத்து கொண்டே இருங்கள்.

புகைப்பிடிப்பவருடன் சற்று அளவாக வைத்துக் கொள்ளுங்கள்

புகைப்பிடிப்பவருடன் சற்று அளவாக வைத்துக் கொள்ளுங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று தெரியுமா? புகைப்பிடிக்கும் நபர்கள் அல்லது அந்த சுற்றுச்சூழலை விட்டு தள்ளியே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் இலக்கை அடைவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

காற்றை சுத்தப்படுத்துங்கள்

காற்றை சுத்தப்படுத்துங்கள்

புகை சூழ்ந்திருக்கும் காற்றை சுத்தப்படுத்த வெள்ளை அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துங்கள். ஆழமில்லாத ஒரு கிண்ணத்தில் ¾ அளவில் வினிகரை ஊற்றி, தேவையான அனைத்து அறைகளிலும் வைத்து விடவும். வீடு முழுவதும் இப்படி இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு கிண்ணத்தில் வைக்கவும். ஒரு நாளைக்குள்ளேயே நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

பழக்கவழக்கத்தை மாற்றுங்கள்

பழக்கவழக்கத்தை மாற்றுங்கள்

சிகரெட் மீதுள்ள ஏக்கத்தை குறைக்க உங்கள் பழக்கவழக்கத்தை மாற்றுங்கள். காலை உணவின் போது வேறு ஒரு நாற்காலியில் அமருங்கள் அல்லது வேலைக்கு போகும் போது மாற்று பாதையில் செல்லவும். வேலை முடிந்ததும் சிகரெட் அடிக்கும் பழக்கம் அல்லது மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதனை மாற்றி, ஒரு நடை கொடுங்கள். காலையில் புகைப்பிடிப்பதுடன் சேர்த்து காபி குடித்து வந்தீர்கள் என்றால் அதனை டீயாக மாற்றி பாருங்கள்.

ஞாபகப்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்

ஞாபகப்படுத்தும் பொருட்களை தூக்கி எறியுங்கள்

பழக்கத்தை கைவிடும் நாள் வரும் போது, அதனை நினைவுப்படுத்தும் அனைத்தையும் தூக்கி எறியுங்கள். சிகரெட்டின் உபகரணங்கள் உட்பட - மிஞ்சி போன சிகரெட்கள், லைட்டர்கள், தீப்பெட்டிகள், ஆஷ் ட்ரேக்கள், ஏன் உங்கள் காரில் உள்ள லைட்டர் முதற்கொண்டு தூக்கி எறியுங்கள்.

கவனத்தை திசைத் திருப்புங்கள்

கவனத்தை திசைத் திருப்புங்கள்

வேலை இடைவேளையின் போது சிகரெட் பிடிக்க செல்லாமல், உங்கள் கணிப்பொறியில் அமர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். உங்கள் நிறுவனம் அதற்கு தடை விதித்தால் தொலைப்பேசி உரையாடல், நடை கொடுத்தல் அல்லது பழங்கள் உண்ணுதல் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

சிகரெட்டை மறக்க சில பரிந்துரைகள்

சிகரெட்டை மறக்க சில பரிந்துரைகள்

சிகரெட்டின் மீது ஏக்கம் வரும் போது என்ன செய்யலாம் என்ற பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். சில பரிந்துரைகள்: ஒரு நடை கொடுத்தல், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தல், நாய்க்கு பந்து போட்டு விளையாடுதல், காரை கழுவுதல், அலமாரியை சுத்தப்படுத்துதல், முகத்தை கழுவுதல், பல் துலக்குதல், போன்றவைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Quit Smoking Naturally

Home remedies to quit smoking can give you a new lease on life. You will reduce your chances of suffering a heart attack or stroke, and developing lung cancer, emphysema, and other lung diseases.
Story first published: Saturday, December 13, 2014, 17:44 [IST]
Desktop Bottom Promotion