For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா?

By Ashok CR
|

வாழ்க்கை முறையை எளிமைப்படுத்துவதற்கு மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது குளிர்சாதன பெட்டி. வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது திருமணமாகாத ஆணாக இருந்தாலும் சரி - அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி தேவைப்படும். அதற்கு ஒரே காரணம் உணவுகளை சேகரித்து அதனை பின்னர் பயன்படுத்துவதற்கே. ஆனால் எத்தனை நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்? குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா?

இது நீண்ட காலமாக நடந்து வரும் விவாதமாகும். இதன் விளைவாக அவ்வப்போது யாராவது தங்களின் கருத்தை பதிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் அதற்கு ஆதரவாக பேசி வந்தாலும் சிலர் அதற்கு எதிராக தங்கள் கருத்துக்களை கூறுகின்றனர். அதற்கு முடிவெடுக்கப்பட்ட தீர்மானம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அது வரை நம்மை காப்பாற்றுபவராக குளிர் சாதன பெட்டி விளங்கும். ஆம், பல கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து இது நம்மை காக்கும். சமைத்த உணவை சேமிக்கலாம், பால் உறையாமல் பாதுகாப்பாக இருக்கும், பழங்களும் காய்கறிகளும் நற்பதத்துடன் இருக்கும் மற்றும் குளிராக இருப்பதால் குளிர்ந்த ஜூஸை பருகலாம். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது ஒரே கருவி தான் - அது தான் குளிர் சாதன பெட்டி.

ஆனால் எத்தனை நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்? நாங்கள் குளிர்சாதன பெட்டியை பற்றி தான் பேசுகிறோமே தவிர உறை பெட்டியை (ஃப்ரீஸர்) பற்றி இல்லை. ஃப்ரீஸர் என வந்து விட்டால், அதன் குணாதிசயத்திலும் சேமித்து வைக்கும் பண்புகளிலும் பெரியளவில் மாற்றம் இருக்கும். இப்போது நாம் பார்க்கப் போவது மீதமுள்ள உணவுகளை எத்தனை நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம்? அது எவ்வளவு ஆரோக்கியமானது? என்பதைப் பற்றி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Refrigerated Food Healthy?


 How long can we store stuff in the fridge? Remember here we are
 talking only about the fridge and not the freezer.
Story first published: Sunday, September 7, 2014, 11:09 [IST]
Desktop Bottom Promotion