For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசும் பாலை விட ஆட்டுப் பால் குடிப்பது மிகவும் நல்லது... ஏன் தெரியுமா?

By Karthikeyan Manickam
|

இதுவரை எப்போதாவது நீங்கள் ஆட்டுப் பால் குடித்துள்ளீர்களா? கடைசியாக எப்போது குடித்தீர்கள்? நம் தேசப் பிதா காந்தியடிகள் ஆட்டுப் பால் தான் குடித்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருமுறை கூட ஆட்டுப் பால் குடித்திருக்க மாட்டோம்.

தினமும் லிட்டர் கணக்கில் பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

ஆட்டுப் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளனவாம்! வயிற்று வலிக்கு சிறந்த மருந்து ஆட்டுப் பால்தானாம்! மேலும் பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? தினமும் ஆட்டுப் பாலைக் குடித்து வந்தால் நம் உடல் வலுவாகும்.

பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்பதற்கான சில காரணங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிதில் செரிமானமாகும்

எளிதில் செரிமானமாகும்

பசும் பால் குடிக்கும் சிலருக்கு வாயுத் தொல்லைகள் ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு ஆட்டுப் பால் ஒரு அருமையான மருந்தாகும். பசும் பாலை விட ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் சிறியவை என்பதும், ஆட்டுப் பாலில் உள்ள பொட்டாசியமும் தான் இதற்குக் காரணமாகும்.

கொழுப்பு குறைவு

கொழுப்பு குறைவு

பசும் பாலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்காக அதை மெருகேற்றுவது வழக்கம். பால் நிறுவனங்களில் இது ஒரு முக்கியப் பணியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொல்லை ஆட்டுப் பாலில் கிடையாது. ஆட்டுப் பாலில் இயற்கையாகவே கொழுப்பு சீரான நிலையில் இருக்கிறது.

அலர்ஜி இல்லை

அலர்ஜி இல்லை

பசும் பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் காரணமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப் போக்கு, எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள். ஆட்டுப் பாலில் கேசின் மிகமிகக் குறைவாக இருப்பதால், இந்த அலர்ஜித் தொல்லைகள் கிடையாது.

லாக்டோஸ் குறைவு

லாக்டோஸ் குறைவு

பசும் பாலில் லாக்டோஸ் எனப்படும் பால் சுகர் அதிகமாக உள்ளது. மனித உடலில் உற்பத்தியாகும் லாக்டேஸ் என்னும் என்சைம் இந்த பால் சுகரை எளிதில் செரிமானம் செய்துவிடும். எனவே, லாக்டேஸ் என்சைம் குறைவாக இருக்கும் சிலருக்கு பசும் பால் சரிப்படாது. அவர்களுக்கு சரியான மாற்று, பால் சுகர் குறைவாக உள்ள ஆட்டுப் பால் மட்டுமே!

ஊட்டச்சத்து அதிகம்

ஊட்டச்சத்து அதிகம்

ஆட்டுப் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 அல்லதி ரிபோஃப்ளேவின் ஆகியவை அதிகம் உள்ளன. தவிர, கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் மிகுதியாக உள்ளன. இதனால், ஆட்டுப் பால் சாப்பிடும் போது நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சுவை?

சுவை?

ஆட்டுப் பாலில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதன் சுவை காரணமாகவே சிலர் அதை விரும்ப மாட்டார்கள். இதற்கு மாற்றாக, அவர்கள் ஆட்டுப் பாலினால் தயார் செய்யப்பட்ட வெண்ணெய், தயிர், ஐஸ்க்ரீம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Goat Milk A Better Alternative To Cow Milk?

Do you know drinking goat milk everyday can actually make you stronger and eliminate most health ailments? Listed below are five reasons why goat milk is a better alternative to cow milk.
Desktop Bottom Promotion