For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் பிராணயாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Ashok CR
|

யோகா என்பது இந்தியாவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கலையாகும். அது மனிதனின் மனது, உடல் மற்றும் ஆத்மாவை ஊக்குவிக்கும் என்று உலகம் முழுவதும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல விதமான வியாதிகளை தடுத்து, அவைகளை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது யோகா. அதே நேரம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா உதவும். பிராணயாமா என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை.

பிராணயாமா என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க...

வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிராணயாமா உங்களுக்கு தருகிறது. இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும்.

வேறு சில: நல்ல சிக்கென்ற இடை மற்றும் தொடை வேண்டுமா? அப்ப இந்த யோகாக்களை செய்யுங்க...

பிராணயாமா செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிராணயாமாவால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிராணயாமாவை முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Pranayama

Pranayama is a technique, which is based on the regulation of incoming and outgoing of breath coupled with its retention. Pranayama offers you many health benefits that cannot be replaced by any other techniques. Here are some of the health benefits of pranayama.
Story first published: Friday, January 10, 2014, 18:34 [IST]
Desktop Bottom Promotion