For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள்!!!

By Nobert Thivyanathan
|

பலர் காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது. மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இதுப்போன்று ஒருசில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள்.

நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மனநிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத் தவிர்க்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய மாற்றங்கள் உங்கள் காலை நேரத்தை இதமாக்கும். அந்த மாற்றங்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்க காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சட்டென எழுந்து ஜிம்மிற்குச் செல்லுதல்

சட்டென எழுந்து ஜிம்மிற்குச் செல்லுதல்

காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள். நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும்.

நெட்டிமுறிக்காமை

நெட்டிமுறிக்காமை

நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். நாம் நெட்டிமுறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத்திறனை சமரசம் செய்துவிடும். ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப்பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டிமுறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும்.

ஒரு கப் தேனீருடன் நாளைத் தொடங்குதல்

ஒரு கப் தேனீருடன் நாளைத் தொடங்குதல்

ஒரு சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கான ரகசியம் காலையில் தேனீர் அல்லது காரத்தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத்தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

மொமைல் போன்களை செக் பண்ணுதல்

மொமைல் போன்களை செக் பண்ணுதல்

மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். காலையில் எழுந்து முதல் இரண்டு மணிநேரத்திற்குள் உலகப்பிரச்சனைகள் எதையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள்.

காலை உணவைத் தவிர்த்தல்

காலை உணவைத் தவிர்த்தல்

காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும். நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம்.

சிடுசிடுப்புடன் எழுந்திருத்தல்

சிடுசிடுப்புடன் எழுந்திருத்தல்

அதிகமானோருக்கு விடியற்காலை அமைதியற்றதும் பரபரப்புடையதுமாக இருக்கிறது. எனவே அப்படி இருப்பதை தவிர்க்க முயல வேண்டும். எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பழக வேண்டும்.

அன்றைய நாளை முன்னதாகவே திட்டமிடாமை

அன்றைய நாளை முன்னதாகவே திட்டமிடாமை

உங்களது துணிகளை மற்றும் உணவுகளை ஒரு நாள் முன்னதாகவே திட்டமிடுகிறீர்களா? மக்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு முன்னதாகவே திட்டமிடாமை. ஒரு நீண்ட நாளுக்கு பின்னர், அடுத்த நாள் காலைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். ஆனால், உணவுகளைத் திட்டமிடுதல் மற்றும் துணிகளை எடுத்து வைத்தல் ஆகியவற்றை முன்னதாகவே செய்துவிடுங்கள். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னரே அடுத்த நாள் காலை உணவிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid These Morning Mistakes

Are you always in a bad mood when you wake up? Do you skip breakfast? A few simple changes can transform your mornings.
Desktop Bottom Promotion