For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைவ உணவு சாப்பிடுறவங்களா? அப்ப "உலக சைவ உணவாளர் தினம்" கொண்டாடுங்க...

By Maha
|

அசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் "உலக சைவ உணவாளர் தினம்" ( World Vegetarian Day) ஆக உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இந்த உலகில் அசைவ உணவை உண்ணாமல் சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும் என்று ஒருசிலர் இருக்கின்றனர். உண்மையில் அசைவ உணவை உண்டால் தான் வாழ முடியும் என்பதில்லை. சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

World Vegetarian Day
சொல்லப்போனால் இந்த நாள் கொண்டாடுவதின் ஒரு நோக்கம், அனைத்து உயிர்கள் மீதும் அன்பை தெரிவிக்க வேண்டும் என்பதனால் தான். இதாவது எந்த உயிரையும் கொன்று சாப்பிடக்கூடாது என்பது தான். மேலும் ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. இருப்பினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் சார்ந்து வாழ்கின்றோம்.

மேலும் அசைவ உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும், கீரை, முளைக்கட்டிய பயிர்கள், தானியங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அசைவ உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் காய்கறிகள், தானியங்கள் போன்றவை அன்றாடம் நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடியவையே. மேலும் அவை விலைமலிவானது.

உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் அசைவ உணவுகளை சாப்பிடுகிறோமா என்ன? வாரத்திற்கு ஒரு முறை தானே சாப்பிடுகின்றோம். அவ்வாறு ஒரு முறை மட்டும் சாப்பிட்டதால் தான் நாம் இவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோமா என்ன? சைவ உணவுகளைத் தானே பெரும்பாலும் சாப்பிடுகின்றோம். சொல்லப்போனால், அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனாலேயே சில சமயங்களில் நிறைய உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் அதுவே சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும்.

ஆகவே அவற்றை கொன்று சாப்பிடுவதை விட, நாம் உற்பத்தி செய்யும் உணவுகளான, காய்கறி, பழங்கள், பயிர்கள், கீரைகள் மற்றும் மற்றவைகளை சாப்பிட்டாலே, நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம். மேலும் அசைவ உணவுகளில் தான் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று நினைப்பவர்கள், அந்த தவறான கருத்தை நீக்கி, சைவ உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நம்பி, அந்த உணவுகளையும் விரும்பி சாப்பிடுங்கள்.

English summary

World Vegetarian Day | சைவ உணவு சாப்பிடுறவங்களா? அப்ப "உலக சைவ உணவாளர் தினம்" கொண்டாடுங்க...

The first day of October is celebrated as World Vegetarian Day all over. It is a special day that provides awareness to the ethical, environmental, health and humanitarian benefits of a vegetarian lifestyle. The whole October month is considered as the Vegetarian Awareness Month and ends on 1st November, World Vegan Day.
 
Desktop Bottom Promotion