For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தம், கவலை மற்றும் பதட்டத்தில் இருந்து விரைவில் விடுவிக்கும் 10 வழிகள்!

ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவர்களின் சிந்தனை செயலிழக்கப்படுகிறது. இந்த மன அழுத்தம் மனநிலையை மட்டும் பாதிப்பதோடு, உடல் நிலையையும் பாதிக்கிறது.

|

உங்களுக்கு ஏற்படும் பதற்றம் மனச்சோர்வை ஏற்படுத்துகிறதா? மன அழுத்தத்தால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் தூக்கம், சோர்வு, மந்தநிலை, மனச்சோர்வு மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மை போன்ற பாதிப்பை அடைகின்றனர்.

10 Quick Ways To Get Rid Of Stress, Anxiety And Tension

இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும் போது அவர்களின் சிந்தனை செயலிழக்கப்படுகிறது. இந்த மன அழுத்தம் மனநிலையை மட்டும் பாதிப்பதோடு, உடல் நிலையையும் பாதிக்கிறது. அதை சமாளிக்கத் தான் நாங்கள் சில எளிய வழிகளை கூறுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாராக இருங்கள்

தயாராக இருங்கள்

வாழ்க்கை முழுவதும் எல்லோருக்கும் சந்தோஷமும் கிடைப்பதில்லை எல்லோருக்கும் துக்கமும் கிடைப்பதில்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனவே அதற்கு உங்களை முன்னரே தயார்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் வரப் போகும் பிரச்சினையை பற்றி நீங்கள் முன்னரே தெரிந்து இருந்தால் முன்கூட்டியே மனதளவில் உங்களை தயார் செய்யுங்கள். இது உங்களுக்கு கஷ்டத்தை சமாளிக்கும் மன வலிமையை தரும்.

சமூக ஆதரவு

சமூக ஆதரவு

உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த தருணங்களில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இருங்கள். ஏனெனில் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்கள் உங்களுக்கு ஆதரவையும் தைரியத்தையும் தருவார்கள்.

நம்பிக்கை வையுங்கள்

நம்பிக்கை வையுங்கள்

என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறை உங்கள் எண்ணங்களை மேலும் தெளிவுபடுத்துவதோடு, உங்கள் இலக்குகளை அடைய உதவும். எப்பொழுதும் நம்பிக்கை வையுங்கள்.

தொடர்பு கொள்ளுதல்

தொடர்பு கொள்ளுதல்

உங்கள் மன அழுத்த உணர்வுகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் விருப்பங்களையும் எண்ணங்களையும் மற்றவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதில் நேர்மையாக இருக்க வேண்டும். இது உங்கள் உறவுகளை மேம்படுத்த உதவும்.

ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் உறுதிப்படுத்துதல்

ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் உறுதிப்படுத்துதல்

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உண்மையை ஏற்று அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். ஏனெனில் உண்மையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மருந்து வேண்டாம் என்று சொல்லுங்கள்

மருந்து வேண்டாம் என்று சொல்லுங்கள்

மன அழுத்தத்திலிருந்து விடுபட பெரும்பாலான மக்கள் புகைப்பிடித்தல், ஆல்கஹால் மற்றும் பிற மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது சில நேரம் வேண்டும் என்றால் மன அழுத்தத்தை மறக்கச் செய்யலாம். ஆனால் அடிப்படை மூல காரணம் முடிவடையாது. எனவே, மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒருபோதும் ஆல்கஹால், காப்ஃபைன், மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.

தீர்மானமாக இருங்கள்

தீர்மானமாக இருங்கள்

மற்றவர்களுடனான உங்கள் உறவுகள் திருப்திகரமானதாகவும், வேதனையாகவும், மன அழுத்தமாகவும் இருக்கலாம். எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருங்கள், அது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்களாக இருக்கலாம். பிடிவாதமாக இருப்பது சற்று கடினம், ஆனால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு அது உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மன அழுத்தத்தை விலக்கி வைக்க முடியும். உங்கள் வலிமையையும், சமநிலையையும் பராமரிக்கவும், அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், மன அழுத்தத்தைக் குறைக்க, முழுமையான தூக்கத்தை பெறுங்கள். உங்கள் பிஸியான கால அட்டவணையில் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்க்கையை அனுபவிக்கவும் தயாராகுங்கள்.

மருத்துவ ஆதரவு

மருத்துவ ஆதரவு

தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தால் நீங்கள் உடனே மனநல மருத்துவரை அணுகுங்கள். மன அழுத்தத்தை குறைக்கவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் அது உங்களுக்கு உதவும்.

பிரச்சினைக்கு தீர்வு காணவும்

பிரச்சினைக்கு தீர்வு காணவும்

மன அழுத்தத்திற்கான சிக்கலை முதலில் அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பிரச்சினையை எளிதாக சமாளிக்க உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Quick Ways To Get Rid Of Stress, Anxiety And Tension

Here are top 10 quick ways to get rid of stress, anxiety and tension. Read on...
Desktop Bottom Promotion