For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் ஜூஸ் தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...!

பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஜூஸ் மிக்ஸரை வாங்கி பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது தான். ஆனால், அந்த ஜூஸை வீட்டில் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.

|

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஒருமித்த அறிவுரையாக உள்ளது. இருப்பினும். பெரும்பாலானோர் பழங்களை அப்படியே சாப்பிடவதை விட, அதனை ஜூஸ் போட்டு குடிப்பதையே விரும்புகின்றனர். பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. அவை சுலபமாக உடலில் இரத்த நாளங்களால் உறிஞ்சப்படுகின்றன. பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், அதனை கடைகளில் வாங்கி குடிப்பதை காட்டிலும் வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Things You Should Always Take Care Of While Extracting Juice At Home

அதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஜூஸ் மிக்ஸரை வாங்கி பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது தான். ஆனால், அந்த ஜூஸை வீட்டில் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்தால் ஜூஸை அனுபவித்து குடிக்கவே முடியாது. இது சுவையை கெடுப்பது மட்டுமின்றி, பழச்சாற்றின் நன்மைகளையும் குறைத்துவிடுகிறது. ஒருவேளை நீங்கள், தினமும் காலை வீட்டில் பழச்சாற்றினை தயாரித்து குடிப்பவராக இருந்தால் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கவனித்து செயல்பட வேண்டும்.

MOST READ: சனி பகவான் அருளால் அக்டோபர் மாசம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்கப் போகுது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிக்ஸர் சூடாக இருக்கக்கூடாது

மிக்ஸர் சூடாக இருக்கக்கூடாது

நீங்கள் வீட்டில் ஜூஸ் போட ஜூஸர் மிக்ஸர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த மிக்ஸர் கண்டிப்பாக சூடாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்திய பின்னரே ஜூஸ் போட வேண்டும். ஜூஸரில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் பழச்சாற்றின் ஆரோக்கிய நன்மைகளை குறைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை அழிக்கலாம். எனவே, இனி ஜூஸ் போடும் இதை நினைவில் கொள்ளுங்கள்.

அதிக வெப்பம், அதிக குளிர் வேண்டாம்

அதிக வெப்பம், அதிக குளிர் வேண்டாம்

வீட்டிலேயே ப்ரஷ் ஜூஸ் போட்டு குடிக்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வெப்பநிலை மட்டுமே. பெரும்பாலானோர், ப்ரஷ் ஜூஸில் ஐஸ் போட்டு குடிப்பதையே விரும்புவர். ஆனால், அது மிகவும் தவறான விஷயம். எப்போதுமே, ஜூஸை சாதாரண வெப்பநிலையில் தான் குடிக்க வேண்டும். அது மிகவும் குளிராகவோ அல்லது சூடாகவோ இருக்கவே கூடாது.

ப்ரிட்ஜில் வைக்க கூடாது

ப்ரிட்ஜில் வைக்க கூடாது

வீட்டில் தயாரித்த ப்ரஷ் ஜூஸை ஒதுபோதும் ப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ப்ரஷாக அரைத்த ஜூஸை ப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் பழச்சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை குறைத்துவிடும்.

சர்க்கரை போடவே கூடாது

சர்க்கரை போடவே கூடாது

அனைவருக்கும் ஜூஸ் என்றாலே இனிப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், பொதுவாக ஜூஸ் போடும் போது அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. பழங்களில் ஏற்கனவே போதுமான அளவு இயற்கை சர்க்கரை இருக்கும். எனவே, இனிமேல் ஜூஸ் போடும் போது சர்க்கரை மட்டும் போட்டுவிடாதீர்கள். இல்லையெனில், உங்கள் சர்க்கரை அளவு அதிகரித்துவிடலாம். பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரை போட தேவையே கிடையாது.

காய்கறி ஜூஸில் உப்பு சேர்க்கக்கூடாது

காய்கறி ஜூஸில் உப்பு சேர்க்கக்கூடாது

எப்போதும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழச்சாற்றுடன், காய்கறி சாற்றையும் குடிக்கலாம். அப்படி காய்கறி ஜூஸ் குடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அதில் உப்பு அல்லது சுவையை அதிகரிக்க வேறு எந்த மசாலாவையும் சேர்க்கக்கூடாது.

விதைகளை அகற்றிடவும்

விதைகளை அகற்றிடவும்

ஜூஸ் போடுவதற்கு முன்பு பழத்தில் உள்ள விதைகளை அகற்றிட வேண்டும். விதையுடன் சேர்த்து ஜூஸ் போடும் போது அதன் சுவையை மாற்றிடும். அதுமட்டுமல்லாது அதன் ஆரோக்கிய பயன்களும் குறைந்துவிடும். எனவே, இனி சோம்பேறித்தனம் பார்க்காமல் விதையை எடுத்துவிட்டு ஜூஸ் போட்டு குடிங்கள். அது தான், உடலுக்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Always Take Care Of While Extracting Juice At Home

Here are some important things you should always take care of while extracting juice at home. Read on...
Story first published: Friday, October 1, 2021, 11:30 [IST]
Desktop Bottom Promotion