For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருக்கடி காலங்களில் பெற்றோர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு வைத்தியங்கள்!

நாம் எதிர்பாராத நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் நோய்களை சமாளிக்க பெற்றோர்கள் எப்போதும் தயாராக இருக்க சில கை வைத்தியங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

|

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் எப்போதும் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் எளிது. ஆனால் அவை அவ்வாறு சரியாக நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதே உண்மை. அதிலும் குறிப்பாக குழந்தைகள் காரியத்தில் நாம் எதிர்பார்ப்பது போன்று நிகழ்வுகள் அமையாது.

இந்த உண்மையை பெற்றோர்கள் எப்போது உணர்ந்து கொள்வார்கள் என்றால் அவர்களின் செல்லக் குழந்தைகள் எப்போதுமே குறும்புகள் மற்றும் சேட்டைகளை விரும்பிச் செய்யும் போதுதான் தாங்கள் நினைத்தது போல் காரியங்கள் நடக்காது என்பதைப் புரிந்து கொள்வர்.

Home Remedies Every Parent Should Know For Emergencies

நாம் மிகவும் ஒரு அன்பான மற்றும் பொறுப்புள்ள பெற்றோராக இருந்து கொண்டு நமது குழந்தைகள் மீது அன்பாகவும் அதே நேரத்தில் மிகவும் கவனமாக அவர்களைக் கவனித்துக் கொண்டாலும், நமக்குத் தெரியாமல் நமது குழந்தைகள் தங்களையே காயப்படுத்திக் கொள்ளும் போது அல்லது அவர்கள் உடல் நலமில்லாமல் போகும் போது நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை நிகழ்வுகள் அமையாது என்பதை புரிந்து கொள்ளலாம். அதிலும் சிறப்பாக நம் குழந்தைகள் தங்களை அறியாமல் சேட்டைகள் செய்யும் போது மற்றும் புதிய காரியங்களில் ஈடுபட முயலும் போது இந்த உண்மை புரியும்.

MOST READ:'ஹை பிபி' இருக்கா? அது எகிறாம இருக்கணுமா? அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...

பொதுவாக குழந்தைகளுக்கு சிறு காயங்கள், வெட்டுகள், சிராய்ப்புகள், சளி, இருமல் மற்றும் தோல்நோய் பிரச்சினைகள் போன்றவை மிக எளிதாக ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. நாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு குழந்தைகளைக் கவனித்துக் கொண்டாலும் நம் முயற்சிகள் அனைத்தும் ஒருசில நேரங்களில் தோல்வியில் முடிந்துவிடும். ஆகவே நாம் எதிர்பாராத நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் நோய்களை சமாளிக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டு வைத்தியத்தின் அவசியம்

வீட்டு வைத்தியத்தின் அவசியம்

குழந்தைகளுக்கான முதலுதவி சாதனங்கள் மற்றும் மருந்துகள் வீட்டில் இருந்தால் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் வீட்டு வைத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதன் மூலம் நாம் நெருக்கடி காலத்தில் மருந்தகங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் வீட்டு வைத்தியம் அதிக செலவை கொடுக்காது. ஆகவே அவசர காலங்களில் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய வீட்டு வைத்தியத்தைப் பற்றி பெற்றோராகிய நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்பாரா நோய்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்திவிடும். ஆகவே வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் கொண்ட பொருள்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

குழந்தைகளின் சளியைக் குணப்படுத்துவதில் மஞ்சள் பால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெடுங்காலமாக மஞ்சள் ஒரு மருத்துவ பொருளாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளிப் பிடித்திருக்கும் குழந்தைக்கு சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து கொடுத்தால், சிறிது நேரத்தில் சளியிலிருந்து அது விடுதலை கொடுக்கும்.

எலுமிச்சை பழச்சாறு

எலுமிச்சை பழச்சாறு

ஒருசில நேரங்களில் குழந்தைகள் சுறுசுறுப்பில்லாமல், சோர்வடைந்து செயல்படாமல் (இயக்க நோய்) இருப்பர். அதைப் பார்த்ததும் பெற்றோர் பயந்துவிடுவர். ஆனால் அந்த பயம் தேவையில்லாத ஒன்று. வாயில் எச்சில் அதிகம் சுரப்பதால் குழந்தைகளுக்கு இந்த இயக்க நோய் ஏற்படுகிறது. எனவே சிறிதளவு எலுமிச்சம்பழச் சாற்றை கொடுக்கலாம் அல்லது எலுமிச்சம் பழத்தை நாக்கால் சுவைக்கச் சொல்லலாம். அது எச்சிலை உலர வைத்து, குழந்தைகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்துவிடும்.

தேன்

தேன்

குழந்தைகள் விரும்பும் மிக முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தேன் ஆகும். தொண்டை வலியைக் குணப்படுத்தும் இயற்கை மருந்துகளில் தேன் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒரு தேக்கரண்டி தேன் தொண்டை வலியை ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. ஆகவே குழந்தைகளுக்கு தொண்டை வலி ஏற்படும் போது அவர்கள் விரும்பும் தேனைக் கொடுத்தால் அவர்கள் தொண்டை வலியிலிருந்து விரைவில் விடுதலை அடைவர்.

சர்க்கரை

சர்க்கரை

நமது மார்பு, வயிற்றிடைப் பகுதியில் பிடிப்பு ஏற்படும் போது விக்கல் ஏற்படுகிறது. ஆனால் சர்க்கரை நமது நரம்பு தசைகளை அமைதிப்படுத்தி அதன் மூலம் மார்பு வயிற்றிடைப் பகுதியில் ஏற்படும் பிடிப்பையும் தளர்த்துகிறது. அதனால் விக்கல் நின்றுவிடும். எனவே குழந்தைகளுக்கு விக்கல் வரும்போது சர்க்கரை கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி

குழந்தைகளின் உடலில் ஓட்ஸ் கஞ்சியை பூசி அவர்களைக் குளிக்க வைத்தால் அவர்களின் தோலில் இருக்கும் அரிப்புகள் பறந்துவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறியம்மை ஏற்படும் போது அது அவர்களின் தோலில் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் அமைதியற்று எரிச்சலோடு காணப்படுவர். இந்த நேரத்தில் ஓட்ஸ் கஞ்சியை அவர்கள் உடலில் பூசி குளிக்க வைத்தால் அரிப்பு குறைந்து அவர்கள் அமைதி அடைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies Every Parent Should Know For Emergencies

Here Are Some Home Remedies Every Parent Should Know For Emergencies. Read On...
Desktop Bottom Promotion